சென்னை,டிச.28- பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை யும் சேர்த்து வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர கட்சிகளும், கரும்பு விவசாயி கள் மற்றும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இக்கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பையும் சேர்த்து வழங்கிட உத்தர விட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் கரும்பு விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் மகிழ்ச்சியடைந்து ள்ளனர். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. கரும்பு விவசாயி களின் கோரிக்கையை ஏற்று உத்தர விட்ட முதலமைச்சருக்கு நன்றியினை யும், பாராட்டுக்களையும் தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.