states

img

தயிர் என்று குறிப்பிட்டாலே போதும் - ஒன்றிய அரசு

தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது.
  தயிர் பாக்கெட்டில் "தஹி" என இந்தி வார்த்தையைதான் குறிப்பிட வேண்டும் எனவும் தயிர் என்பது அடைப்பு குறியில் தான் இருக்க வேண்டுமென்றும்(FSSAI) உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது இதனால் ஒரே நாளில் உத்தரவை திரும்பபெற்றுள்ளது. 
எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! குழந்தையைக் கிள்ளிவிட்டு சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன் தொலைந்து விடுவீர்ர்கள் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்