திருவாரூர், ஜன.25- குடவாசல் எம்.ஜி.ஆர். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடவாசல் பகுதியிலேயே அமைய வேண்டும் என மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் இரா.ஹரிசுர்ஜித் மற்றும் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்பதாவது: டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த அதிமுக அரசால் மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய சில அரசு கல்லூரிகளில் மணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டி டங்கள் மற்றும் கிராமப்புற மாண வர்களின் தேவைகளை அறிந்து கல்லூரிகளும் துவங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக திருவா ரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குட வாசல் ஒன்றியம் ஓகை பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி 28.7.2017 அன்று துவங்கப்பட்டது. இக்கல்லூரியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 213 மாணவ-மாணவியர் சேர்க்கப் பட்டனர். தற்போது இக்கல்லூரி குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 3 கூடுதல் கட்டிடங்களில் தற்காலிகமாக செயல்படுகிறது.
2022-2023 ஆம் கல்வி யாண்டில் இக்கல்லூரியின் மாண வர்கள் எண்ணிக்கை 684. இங்கு பயிலும் மாணவர்களில் பெரும்பா லானோர் பேருந்து வசதிகூட இல்லாத கிராமத்தைச் சேர்ந்த வர்கள். கிராமப்புற மாணவர் களுக்கான உயர்கல்வியை இக் கல்லூரி நிறைவேற்றித் தருகிறது. இந்த கல்லூரி குடவாசல் பேரூ ராட்சி பகுதியிலேயே அமைய வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் பல்வேறு போராட்டங்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனுக்களும் கொடுக்கப் பட்டன. ஆனால், இம்மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்காததால், குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலை யத்தில் செப்டம்பர் 29, 30, அக்டோ பர் 1,2 ஆகிய தேதிகளில் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடத் தப்பட்டன.
நான்காம் நாள் போராட்டத் தின்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில், குடவாசல் பகுதி யில் இக்கல்லூரி அமையும் என உறுதியளிக்கப்பட்டு, குடவாசல் விளையாட்டு மைதானம் முன்பு கல்லூரி கட்டுவதற்கான இடமும் அளவீடு செய்யப்பட்டது. இந் நிலையில், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை கொர டாச்சேரி ஒன்றியம் செல்லூர் பகு திக்கு மாற்றும் பணியை மேற் கொண்டிருக்கிறது. ஏற்கனவே திருவாரூர் சட்ட மன்ற தொகுதியில் திரு.வி.க. அரசு கல்லூரி, தற்போது துவங்கப் பட்ட கூத்தாநல்லூர் அரசு மக ளிர் கல்லூரி, கூடுதலாக மருத்து வக் கல்லூரி, மத்திய பல்கலைக் கழகம் ஆகியவை உள்ளன. மேலும் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரி துவக்கத்தின் போது, கடந்த 2017-இல் தமிழ்நாடு அரசு, இக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.7 கோடியே 97 லட்சம் 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கடந்த சட்ட மன்ற கூட்டங்களில் குடவாசல் கல்லூரி சம்பந்தமாக கேள்வி எழுந்த போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “அங்குள்ள மக்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கேற்ப கல்லூரி அமை யும்” என்றார். தற்போது நடந்த கூட்டத்தில்கூட கல்லூரிக்கான இடத்தை ஆய்வு செய்கிறோம்; இன்னும் இடம் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடவாசல் பேரூராட்சிப் பகுதியிலேயே அமைய வேண்டும் என வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஜனவரி 30 ஆம் தேதி மீண்டும் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்குகிறது. இப்போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சி தலை வர்களும், பொது நல அமைப்பு களும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.