சென்னை, டிச. 8- வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் உள்ளது என்றும், இரண்டு நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டா இடையே வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை டிசம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில், மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இந்நிலையில் சென்னை நுங்கம் பாக்கம் பகுதியில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த புயலானது வெள்ளிக்கிழமை (டிச. 9) புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வெள்ளியன்று தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதி களில் பெரும்பாலான இடங்க ளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சி புரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதி களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவ ண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். தர்ம புரி, சேலம்,நாமக்கல், திருச்சி, பெரம்ப லூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப் பட்டினம், திருவாரூர், தஞ்சா வூர்,புதுக்கோட்டை, கரூர், திண்டுக் கல், மதுரை, சிவகங்கை மாவட்டங் கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும்பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.