states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம், செப். 24 - நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லைப்பகுதியான கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென செருதூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பறித்துச் சென்றனர். மீன்களை தர மறுத்த 4 மீனவர்கள் மீது இரும்பு பைப்பால் தாக்குதல் நடத்தினர். காயமடைந்த 4 மீனவர்களும் நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் உறுப்புகள்  தானம் செய்வோருக்கு  அரசு மரியாதை: கி.வீரமணி பாராட்டு

சென்னை, செப்.24- உடல் உறுப்புகளைக் கொடை யாகக் கொடுப்போருக்கு, அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல மைச்சர் அறிவித்திருப்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமானது  என்று திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.  பல விபத்துகள் காரண மாக  மூளைச்சாவு அடைந்து உயிருக் குப் போராடும் நோயாளிகளின் முக்கிய உடல் உறுப்புகள் - வாழும் மற்றவர்களுக்கு  பயன்படுத்தப்பட்டு மற்ற மனிதர் வாழ்வில் ஒரு புதுயு கத்தை, புதுவாழ்வை ஏற்படுத்த உத விடும் பெற்றோர்களை அரசும் நாமும் எப்போதும் பாராட்டி வருகிறோம். அப்படி  உறுப்புக் கொடை வழங்கி யோரது இறுதி நிகழ்வு அரசு மரியாதை யுடன் நடத்தப்படும் என்ற முதல்வர் அறி விப்பு, ஓர் எடுத்துக்காட்டான மாமனித நேயமாகும். மனித மாண்பைப் போற்  றும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.  சாதி, மதம், இனம், நாடு முதலிய பலவற்றையும் தாண்டி “மனிதம்“ என்பது தான் பொதுவாக அறிவியல் ரீதியானது; சமூக நலம் சார்ந்தது என்பதை விளக்குவதே, குருதிக் கொடை - விழிக்கொடை மற்றும் உறுப்புக் கொடைகளின் உள் அமைதி கொண்டுள்ள தத்துவங்கள் என்றும் வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

6 கிராமங்களை புகையிலை இல்லாத கிராமங்களாக மாற்றத்திட்டம்

ராணிப்பேட்டை,செப்.24- ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத் தின் கீழ் 6 கிராமங்களை புகையிலை  இல்லா கிராமங்களாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக சுகாதாரத் துறையினர் தெரிவித்த னர். பீடி, சிகரெட், பொடி மற்றும் ஹான்ஸ்  உட்பட புகையிலை பொருட்களினால் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படு கின்றன. குறிப்பாக, பீடி, சிகரெட்டுகளை  பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி அவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களும் வாய், நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புகையிலை பயன்பாடுகளை குறைப்பதற்கான நடவடிக்கையாக தேசிய புகை யிலை தடுப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன  “திமிரி வட்டத்தில் விளாரி கிராமம், சோளிங்கர்  வட்டத்தில் வேலம், வி.புதூர், ஆயல், சூரை மோட்டூர், நந்திமங்கலம் ஆகிய 6  கிராமங்கள் தேசிய புகையிலை தடுப்பு  திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப் பட்டுள்ளன.  இந்த கிராமங்களில் உள்ள கடை களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், கிராம மக்கள் யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்துவதோடு, அதன் மூல மாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு:  செப்.29இல் தொடக்கம்

சென்னை, செப். 24- தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி செப்டம்பர் 29இல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு குழந்தைகள் முதல் பெண்கள் வரை, மூன்றாம் பாலினத்தவர்கள் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை என  பல்வேறு பிரிவினரின் நலன்களுக்காக கவனம் ஈர்க்கும் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் சரியான புள்ளிவிவரங்கள் இருந்தால் தான் திறம்பட செயல்படுத்த முடியும். இதை  அனைத்து நேரங்களிலும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஒருங்கிணைந்த சர்வே எடுக்க தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்கு நரகம் முடிவு செய்துள்ளது. இதைக் கொண்டு  டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை கள் வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக  அரசின் “ரைட்ஸ்” திட்டத்தின் கீழ் மேற்கொள் ளப்படுகிறது. இந்த சர்வே பல்வேறு கட்டங்க ளாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்ட மாக சென்னை, திருச்சி, தர்மபுரி, தென்காசி,  கடலூர் ஆகிய மாவட்டங்களில் எடுக்கப்படு கிறது. செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாத இறுதி வரை சர்வே பணிகள்  நடைபெறும். இரண்டாம் கட்டமாக மற்ற  மாவட்டங்களில் சர்வே பணிகள் நடை பெறும். இந்த சர்வேயில் மாற்றுத்திறனாளி யின் பெயர், வயது, கல்வித் தகுதி, வேலை,  குடும்ப உறுப்பினர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குநர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.  கடைசியாக 2011ஆம் ஆண்டு நடத்தப் பட்ட தேசிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் தான் போதிய விவரங்கள்  கிடைத்தன. பார்வை திறன் மாற்றுத்திறனாளி கள், காது கேளாதோர், வாய் பேச முடியாத  மாற்றுத்திறனாளிகள், உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சார்ந்த பாதிப்புகள், பல்வேறு விதமான பாதிப்பு கள் என்ற வகையில் விவரங்கள் சேகரிக்கப் பட்டன. அதில், சென்னையில் மட்டும் 90,064  மாற்றுத்திறனாளிகள் இருந்தது தெரியவந்தது. அதில் 49,888 பேர் ஆண்கள், எஞ்சியவர்கள் பெண்கள். அதன்பிறகு 2021ஆம் ஆண்டு அடுத்தகட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா நெருக்கடி  உள்ளிட்ட காரணங்களால் நடத்தப்பட வில்லை. எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பை  விட அதிக விவரங்கள் கிடைக்கும் வகை யில் தற்போதைய கணக்கெடுப்பு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்  தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தை சேர்ந்த பெண் தன்னார்வலர்கள் 600 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிய வருகிறது.