states

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்

சென்னை, ஜூன் 1- கோடை விடுமுறைமுடிந்து பொது மக்கள் சென்னை திரும்புவதற்கு அரசு  போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்து  வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் இறுதியிலிருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம்  அதிகமாக இருப்பதால் ஜூன் 7 ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடு முறைக்கு சொந்த ஊர், சுற்றுலா தலங்கள் சென்றவர்கள் பள்ளி திறப்பது தாமதமானதால் பய ணத்தை தள்ளி வைத்தனர்.மேலும் ஒரு  வாரம் கழித்து பள்ளிகள் திறப்பதால் வெளியூர் சென்றவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு வருவது தள்ளிப் போகிறது. 3 ஆம் தேதியிலிருந்து 6 ஆம்  தேதி வரை வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.  

இதனால் அரசு போக்குவரத்து கழகத்திலுள்ள பேருந்துகளை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு அதிகரித் துள்ளது.  எந்த ஆண்டும் இல்லாத  அளவிற்கு இந்த வருடம் பொதுமக்க ளின் பேருந்து பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். வெளியூர் சென்றவர்கள் சொந்த  ஊர் திரும்ப வசதியாக ‘ஸ்பேர்’ பேருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 5 ஆம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்து கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.  இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையிலிருந்தும் பிற நகரங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் பயணம் செய்கிறார்கள். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடப்பதால் வெளியூர் பயணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பேருந்துகள் தவிர  கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இதேபோல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனா லும் மக்கள் கூட்டம் எதிர்பாராமல் வருகிறது. விழுப்புரம், சேலம், மதுரை,  கோவை, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகத்தில் இருந்து  கூடுதலாக பேருந்துகள் பெறப்பட்டு  கூட்டத்தை சமாளிக்க திட்டமிட்டுள் ளோம். 7 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

;