states

img

சேலம் - சென்னை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

ஓமலுார், அக்.30- சேலம் விமான நிலையத்தில், ‘உடான்’ திட்டத்தில்  பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் பகுதிகளுக்கு,  ‘இண்டிகோ, அலையன்ஸ் ஏர் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ‘உடான்’ அல்லாத திட்டத்தில் சேலம் - சென்னை விமான சேவையை, ‘இண்டிகோ’ நிறுவனம் மட்டும் இயக்கி வருகிறது. 70 இருக்கைகள் கொண்ட, ஏ.டி.ஆர்., ரக விமானத்தில், தினமும், 55 முதல், 60 பேர் முன்பதிவு செய்கின்றனர். அதற்கு சாதாரண நாட்களில், 3,500 முதல், 4,500 ரூபாய் வரை சென்னைக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையால் ஞாயிறு, திங்கள்  ஆகிய நாட்களில், சேலம் - சென்னை விமான கட்டணம் ரூ.13,500 முதல், 14,500 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த விபரங்கள், அந்நிறுவன வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.