states

img

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு கேட்டு எம்எல்ஏகளிடம் மனு அளிப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 23- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்  பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள்  உரிமை மீட்பு மாநாடு திருச்சி  செயிண்ட் ஜோசப் கல்லூரி யில் புதனன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணி மேகலை தலைமை வகித் தார். இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப் பினர் ஜான் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். அரசு  ஊழியர் சங்க மாநிலத் தலை வர் அன்பரசு துவக்கி வைத் தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் ஆரோக்கியராஜ், ரஹீம், முருகன், கத்தோலிக்க கல்விக் கழகச் செயலாளர் போஸ்கோ, இயேசு சபை  பள்ளிக்கல்வி ஒருங்கி ணைப்பாளர் ஜான் கென் னடி, ஜோசப் கல்லூரி முதல்  வர் ஆரோக்கியசாமி, ஜமால்  முகமது கல்லுாரி தமிழ்த்  துறை தலைவர் சையத்  ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில், மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி களில் பயிலும் மாணவர் களுக்கு தனியாக 7.5 சத விகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு  முதல் 8 ஆம் வகுப்பு வரை யிலான சிறுபான்மை மாண வர்களுக்கு இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ள ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை  யை மீண்டும் வழங்க வேண் டும் ஆகிய தீர்மானங்களை வலியுறுத்தி மார்ச் 25, 26  தேதிகளில் சட்டமன்ற உறுப்  பினர்களை சந்தித்து கோரி க்கை மனு அளிப்பது, ஏப்ரல் 11 அன்று ஆசிரியர்கள், மாண  வர்கள் கோரிக்கை அட்டை  அணிவது என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;