அமெரிக்காவை மைய மாக கொண்ட நிறு வனங்கள் மட்டுமே பணிநீக்க நடவடிக்கை யில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது ஐரோப்பிய நிறுவனங் களும் பணிநீக்க நட வடிக்கையில் களமிறங்கி யுள்ளன. உலகின் பிரபல இரசாயன நிறுவனமான ஜெர்மனியின் பாஸப் (BASF) 2,600 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. முன்ன தாக பிரிட்டிஷ் ஸ்டீல் நிறு வனம் நூற்றுக்கணக் கான ஊழியர்களை வெளி யேற்றியது.
தேசிய மருத்துவ ஆணை யத்தின் வழிகாட்டுத லின்படி பீகார் மாநிலத் தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலைப் பல்கலைக்கழ கங்களில் 50% இடங் களின் அரசுக் கட்டணக் கட்டமைப்பிற்கு அம்மா நில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குளிரூட்டும் நிலைய கசிவு காரணமாக சர்வ தேச விண்வெளி நிலை யத்தில் சிக்கித் தவிக்கும் மூன்று விண்வெளி வீரர்களை மீட்க ரஷ்யா வின் விண்வெளி நிறு வனமான ரோஸ்கோஸ் மோஸ், “சோயுஸ் எம்.எஸ் 23” என்ற விண்கல த்தை வெற்றிகரமாக ஏவி யது. இந்த புதிய விண் கலம் 3 விண்வெளி வீரர் களையும் செப்டம்பர் மாத த்திற்குள் பூமிக்கு கொ ண்டு வரும் எனவும் தக வல் வெளியாகியுள்ளது.
உலகச் செய்திகள்
உணவுப் பாதுகாப்பின்மையால் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் அம்மை, மலேரியா, டெங்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பெருமளவில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஆண்டில் அம்மை நோய் பரவியதைச் சுட்டிக்காட்டும் உலக சுகாதாரக் கழகம், உணவுப் பாதுகாப்பின்மை தான் இந்த நோய்களுக்குக் காரணம் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது.
உருக்கு உற்பத்தியில் பத்தாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு ஈரான் முன்னேறியுள்ளது. சர்வதேச உருக்குக் கழகம் இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டிருக்கிறது. இக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜனவரி மாதத்தில் 27 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உருக்கு உற்பத்தியை ஈரான் மேற்கொண்டு ள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியோடு ஒப்பிடுகையில் ஈரானின் உற்பத்தியில் 27.7 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
தனது சட்டவிரோதத் தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்கிறது. மேற்குக்கரைப்பகுதியில் 11 பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த, இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசாத் திட்டுப் பகுதிக்குள் வான்வழியாகத் தாக்குதல்களை நடத்தி யுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள சில போராளிக்குழுக்கள் பதில் தாக்குதல்களாக இஸ்ரேலியப் பகுதிகளுக்குள் ராக்கெட்டுகளை செலுத்தியுள்ளன.