முதியோர்களின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று காது கேளாமை. காது கேட்கும் கருவி மருத்துவக் காப்பீட்டில் அடங்காது. நான் ஏழாண்டுகளுக்கு முன் இரண்டுகாதுக்கும் வாங்கினேன். ஆறு ஆண்டுகள் பிரச்சனை இல்லை.அப்புறம் சின்ன சின்ன பிரச்சனை. பழுது பார்க்கும் செலவு கொஞ்சம் அதிகமே. ஆயினும் பலன் இல்லை. முடங்கியது முழுதாய். இப்போது இந்த மாடல் புழக்கத்தில் இல்லை.பாகங்கள் கிடைப்பது சிரமம்.கிட்டத்தட்ட முழுதாக முடங்கியது. புதிதாக வாங்குவது. தவிர்க்க முடியாது ஆகியது.வாங்கியாச்சு. விலை வரியும் உள்ளடக்கி ரூ.60,000/ ( இரண்டு காதுக்கான கருவிகளும் சேர்த்து ) நான் விலை விபரத்தில் உள்ளே போய் பார்த்தேன். அதிர்ந்தேன். மோடி அரசின் மகா காருண்யம். என்னென்பது ? மேடம் நிர்மலா சீத்தாராமன்ஜி ! தேங்ஸ்... காது கேட்கும் கருவிக்கு மருத்துவக் காப்பீடு கிடையாது. ஆனால் 18 சதவீதம் ஜிஎஸ்டி உண்டு. நான் கொடுத்த விலையில் மோடி சர்க்கார் பிக்பாக்கெட் அடித்தது சுமார் பத்தாயிரம் ரூபாய்!
முதியோர் மீதான மோடியின் கருணையோ கருணை! சுபொஅ.