சென்னை, மார்ச் 17- போதையற்ற தமிழ்நாடு இயக்கத் திற்கு ஆதரவாக 10 லட்சம் கையெழுத்து களை மாணவர்களிடம் பெற்றுத்தருவ தாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறி வித்துள்ளது. போதையற்ற தமிழ்நாடு என்கிற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் நடத்தும் ஒரு கோடி கையெ ழுத்து இயக்கத்திற்கு கல்வி நிலை யங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு சிறுபான்மை கல்வி நிலை யங்கள் கூட்டமைப்பின் துணைத்தலை வர் நசீர் அகமது, தனியார் பள்ளி கூட்ட மைப்பு பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்த குமார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். தமிழ்நாடு சிறுபான்மை கல்வி நிலை யங்கள் கூட்டமைப்பின் துணைத்தலை வர் நசீர் அகமது வாலிபர் சங்கம் எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரி வித்துள்ளார். கையெழுத்து இயக்க ஆத ரவு அளிக்க அமைப்பில் முடிவு எடுப்ப தாக தெரிவித்தார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆதரவு தெரிவித்துள் ளார். நர்சரி, மெட்ரிக் தனியார் பள்ளி கூட்ட மைப்பு பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்த குமார் முழுமையான ஆதரவு தெரி வித்துள்ளார். தமது கூட்டமைப்பில் உள்ள 10 ஆயிரம் தனியார் பள்ளிகளி லும் 10 லட்சம் மாணவர்களிடம் விழிப்பு ணர்வு கையெழுத்துக்களை பெற்று ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு உத வுவதாக அறிவித்துள்ளார். மேலும் போதைப் பழக்கங்களுக்கு எதிராக 10 ஆயிரம் பள்ளிகளிலும் கலை இலக்கிய போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாக்கள் நடத்தப்படும் என்றும் உறுதி யளித்துள்ளார்.