states

img

மாவீரர்களை நெஞ்சில் நிறுத்துவோம்

“விழிப்படைந்து வந்த  மக்களுடன்  இப்படிப்பட்ட ஆழமான தொடர்பை மற்ற எந்த  ஒரு புரட்சியாளரும் வைத்திருக்கவில்லை. பகத்சிங் போல வேறு எவரும் பொது மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அன்புக்குரியவர்களாக இல்லை. தில்லியின் சட்டசபையில்  ஒரு குண்டை வீசிய பிறகு  அவர் எழுப்பிய முழக்கத்தால் அவர் தனது போராட்டத்தை அடையாளப்படுத்தினார். ‘புரட்சி ஓங்குக’ என்ற முழக்கம் இந்திய மக்களுக்கு அந்த நேரத்தில் அறிமுகம் இல்லாத ஒன்றாக இருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி கம்யூனிஸ்ட் தலைமை சிறிது காலம் முன்பே இம்முழக்கத்தை எழுப்பியது. ஆனால் மக்களைச் சென்றடையவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான வெறுப்பை, மிகப்பெரிய தனிநபர் துணிகரச் செய்கையுடன் பகத்சிங் இணைத்தார். போராடும் தேசத்தின் அடையாளமாகவும்,அந்நிய ஆட்சிக்கு எதிரான அதன் வெறுப்பின் வடிவமாகவும் மாறினார்.”

பகத்சிங் குறித்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.டி.ரணதிவேவின் மதிப்பீடு சரியானதென்பதை காலம் கணித்தது. பகத்சிங் முன்வைத்த முழக்கமான ‘இன்குலாப் ஜிந்தாபாத்’  (புரட்சி ஓங்குக) என்பது சுதந்திரப் போராட்டத்தின்போது எழுப்பப்பட்ட பலவிதமான முழக்கங்களுள் நிலைத்து நின்ற  ஒரு முழக்கமாக நீடித்தது தற்செயலானதல்ல. இன்றளவும் நாட்டில் அனைத்து அரசியல் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் இந்த முழக்கத்துடன் துவங்குகிறது-முடிகிறது. 1931 மார்ச் 23ல் தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு நாடு முழுவதும் 3 நாட்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகிய 3 தியாகிகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் வீதம் எதிர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. பகத்சிங்கின் தனிச்சிறப்பு அர்ப்பணிப்பு மிக்க புரட்சி வாழ்க்கையின் உச்சம். இன்றைய இளை ஞர்கள் அவரின் அடியொற்றி ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு டன் சோஷலிச இலக்கை நோக்கிப் பயணிக்க உறுதி ஏற்க வேண்டியது காலத்தின் அவசியம்.

-பெரணமல்லூர் சேகரன் 

இன்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்
 

;