states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரபல ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜு’ஸ் (BYJU’S) ஸ்டார்ட்அப் பொறி யியல், விற்பனை, தள வாடங்கள், மார்க்கெட் டிங், தகவல் தொடர்பு பிரி வுகளில் பணியாற்றும் 1,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

வடமாநிலங்களில் குளிர்  வாட்டி வரும் நிலையில், தில்லியில் திடீரென வெப்பநிலை எகிறி வரு கிறது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் தில்லி-என்சிஆர் பகுதி யில் வெப்பநிலை 9-10 டிகிரி செல்சியஸ் உயரும் எனவும், வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அறிவித்துள்ளது.

அரசு ஹோமியோபதி மருத்துவர்களின் ஓய்வு வயது தற்போதைய 60  வயதிலிருந்து 62 ஆக மாற்ற வேண்டும். அரசு அலோபதி மருத்துவர் களின் ஓய்வு வயது 62 ஆக உள்ள நிலையில், ஹோமியோபதி மருத்து வர்களின் ஓய்வு பெறும் வயதில் மட்டும் ஏன் இந்த வேறுபாடு? இது சமத்துவக் கொள்கையை மீறுவதாக உள்ளது என அலகாபாத் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரி வித்துள்ளது.

டெல்டா பகுதியில் கடந்த  2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழை யால் 21 ஆயிரம் ஏக்கர்  நெற்பயிர்கள் சேதமடைந் துள்ளன.

தீக்கதிர் விரைவு செய்திகள்

 

தேக்க நிலையிலிருந்து மீட்க உருப்படியான அறிவிப்புகள் இல்லை:  கோசியா அறிக்கை 

கோயம்புத்தூர், பிப்.2- பம்பு செட் உள்ளிட்ட பிரதான தொழில்களை தேக்க நிலை யிலிருந்து மீட்க உருப்படியான அறிவிப்புகள் ஏதும் ஒன்றிய  பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக கோசியா அறிக்கையில் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் கம்ரசர் தொழில் கூட்டமைப்பின் சார்பில், இவ்வமைப்பின் தலைவர் ரவீந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய அரசு 2023-2024 ஆண்டு நிதி நிலை அறிக்கை யில், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.10 லட்சம் கோடி, ரயில்வே கட்டுமான வளர்ச்சிக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு களை வரவேற்கிறோம்.  பெரிய நிறுவனங்கள் சிறுகுறுந் தொழில்களுக்கான பில் தொகையை உரிய காலத்தில் கொடுப்பதை நிர்ப்பந்தப் படுத்தும் புதிய விதிமுறை அறிவிப்பு ஆகியவை வரவேற்க தகுந்த அம்சங்கள். அதே சமயம் சிறு குறு தொழில்க ளின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து அறிவிப்புகள் இல்லை. ஏற்கனவே கடன் எதுவும் பெறாத குறுந்தொழில்க ளுக்கு கடன் திட்டம் அறிவிப்பு இல்லை. ஜிஎஸ்டியில் தேவை யான சீர்த்திருத்தங்கள், டிரிப்யூனல் அமைப்பதிற்கான அறிவிப்புகள் இல்லை. ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம், மறு பக்கம் சிறுகுறுந் தொழில்களில் ஆள் பற்றாக்குறை, இவை இரண்டையும் இணைத்து பிரச்சனை களை சீர்செய்வதற்கான அறிவிப்பு இல்லை. தொழிற்சாலை மூலப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்துவது நிரந்தர மாக கண்காணிப்பு கமிட்டி அமைப்பது பற்றிய அறிவிப்பு ஏது மில்லை, கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த மாநில தலைநக ரில் விற்பனை மையங்கள் அமைக்க திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. அதே போல் சிறு குறுந்தொழில்கள் தங்கள் பொ ருட்களை சந்தைப்படுத்த மார்க்கெட்டிங் மையங்கள் ஏற்படுத்த வேண்டும். தற்போது கோவையின் பம்பு செட் மற்றும் பிரதான தொழில்களை தேக்க நிலையிலிருந்து மீட்க உருப்படியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக் கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு:  உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை,பிப்.2- இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயரா மன் தாக்கல் செய்த பொதுநல மனு வில், “சக்கி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை  சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித் துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அறநிலையத் துறை அகற்றக் கூடாது என்பதற்காக, தனக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக எடுப்ப தற்கு அறநிலையத் துறை முயற்சிப் பதாக கூறி தேசிய பட்டியலின ஆணை யத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த ஆணை யம், ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தற்போ தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குடிமையியல் நீதிமன்றத்தின் உரிமையை ஆணையம் எடுத்துக் கொள்ள அதிகாரம் இல்லை. எனவே,  ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தர வுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்திய நாதன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு  முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணை யத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.  ஆனால், எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அத்துடன், தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்து சமய அற நிலையத் துறைக்கு அனுமதி அளித்து  உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ரூ.44 ஆயிரத்தை நெருங்கும்  தங்கம் விலை

சென்னை,பிப்.2- தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள் ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 5  ஆயிரத்து 475 க்கு விற்பனை செய்யப் படுகிறது. வியாழனன்று(பிப்.2) சந்தை நிலவரப்படி 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒன்றிய அரசின் பட்ெஜட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதே போல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1300 உயர்ந்து 77,300க்கு விற்பனை யாகிறது.

அரசு வேலைக்காக  67.75 லட்சம் பேர் காத்திருப்பு 

சென்னை,பிப்.2- அரசுப் பணிக்காக, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு  செய்து காத்திருப்போரின் எண் ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 ஆகும். அவர்களில் ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327. பெண்கள்  31 லட்சத்து 60 ஆயிரத்து 648. மூன்றாம்  பாலினத்தவர் 275. இவர்களில் 19  வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட வர்களே அதிகமாக உள்ளனர். 18 வயதுக்குக் குறைவானவர் கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேரும்,  31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேரும், 46 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 பேரும்  உள்ளனர். 60 வயதைக் கடந்தவர்க ளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 675 ஆக உள்ளது. ஒட்டுமொத்த பதிவுதாரர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 396 மாற்றுத்  திறனாளிகளும் உள்ளனர். அவர்க ளில் ஆண்கள் 95 ஆயிரத்து 247  பேரும், பெண்கள் 48 ஆயிரத்து 149  பேரும் உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இன்று ஆசிரியர் தகுதித்தேர்வு 

சென்னை,பிப்.2- இரண்டாம் தாளுக்கான ஆசிரி யர் தகுதித்தேர்வு வெள்ளியன்று (பிப்.3) நடக்கிறது. இத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் பேர்  எழுதுகிறார்கள். கணினி மூலமாக தொடங்கும் இத்தேர்வு 12 ஆம் தேதி வரை நடக்கிறது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர். அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்டமாக 3 ஆம் தேதி தொடங்கி  8 ஆம் தேதி வரையிலும், இரண்டாம்  கட்டமாக 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலும் நடக்கிறது.  காலை மற்றும் மாலை இருவேளையி லும் இத்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கல்வி அதிகாரிகள் மேற் பார்வை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

கோடைகால தினசரி  மின்தேவை உயரும்  மின்வாரியம் கணிப்பு

சென்னை,பிப்.2- தமிழ்நாடு முழுவதிலும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பயனாளர்களுக்கு மின்வாரி யம் மின்விநியோகம் செய்கிறது. இதனால், தமிழகத்தின் தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில்  உள்ளது. குளிர்காலத்தில் மின்விசிறி, கூலர், ஏ.சி. உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு குறைவதால், தினசரி பயன்பாடு 12 ஆயிரம் மெகாவாட்டாக குறையும். கோடைகாலத்தில் இவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால், தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் தினசரி எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை மின்வாரியம் முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப தனது சொந்த மின்னுற் பத்தியை அதிகரிப்பதோடு, வெளி சந்தையில் இருந்து மின்சா ரம் கொள்முதல் செய்து தினசரி தேவையை பூர்த்தி செய் யும். இந்நிலையில், வரும் கோடைகாலத்தில் தினசரி மின்தேவை எவ்வளவு அதிகரிக்கும் என மின்வாரியம் கணித் துள்ளது. அதன்படி, வரும் கோடைகாலத்தில், தமிழ் நாட்டின் தினசரி மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சராசரி தேவையை விட 4 ஆயிரம் மெகாவாட் அதிகம். அதிகரிக்கும் இந்த  மின்தேவையை பூர்த்தி செய்ய, குறுகியகால அடிப்படை யில் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்பட உள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘வேலை நிறுத்தமே உதவும்’’

டோக்கியோ, பிப்.2- சரியான மாத மற்றும் ஒரு மணி நேர ஊதியத்தைப் பெற வேலை நிறுத்தங்களே உதவும் என்று ஜப்பான் தொழிற்சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு (சென்ரோரென்) முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் பணியாற்றி வரும்  தொழிலாளர்களின் மாத ஊதியத்தில்  30 ஆயிரம் யென் அதிகப்படுத்த வேண்டும் என்றும், ஒரு மணி நேரத்திற் கான ஊதியத்தை மேலும் 150  யென் அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரி க்கை வைத்திருக்கிறார்கள். இந்த ஊதி யத்தைப் பெற நடவடிக்கைத் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் கோ ரிக்கையில் குறைந்தபட்ச ஊதியத்தை யும் முன்வைத்திருக்கிறார்கள்.  எந்தத் துறையில் பணியாற்றி னாலும் அவர்களுக்கு மாத ஊதிய மாகக் குறைந்தபட்சம் 2 லட்சத்து 25 ஆயிரம் யென் மற்றும் ஒரு மணி நேர  ஊதியமாக 1,500 யென் என்றும் தொழிற் சங்கங்கள் கோரியுள்ளன. தங்கள் கோரிக்கை குறித்துக் கருத்து தெரி வித்துள்ள சென்ரோரென்னின் தலை வர் ஒபாடா மசாகோ, “அண்மையில் முதலாளிகளின் கூட்டமைப்பு ஒரு வழி காட்டுதலைக் கொடுத்திருக்கிறது. அந்த வழிகாட்டுதல்களில் ஊதியம்  வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி யிருக்கிறார்கள். ஆனால், உண்மை யில் அவர்கள் முன்வைக்கும் ஆலோச னையில் 5 விழுக்காடு ஊதிய  உயர்வு  கூட இல்லை” என்று சுட்டிக்காட்டு கிறார். மேலும் தங்கள் கோரிக்கை களைக் பெறுவதற்கான நடவடிக்கைத் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், “சரி யான ஊதியத்தைப் பெற வேலை நிறுத்தமே மிகச் சிறந்த கருவியாக இருக்கிறது. அதுதான் கணிசமான ஊதிய உயர்வைத் தர வேண்டிய கட் டாயத்தை உருவாக்குகின்றது. இத்த கைய தொழிற்சங்க உரிமையைப் பயன்படுத்துமாறு சக தொழிலாளர் களை தொழிற்சங்க உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்” என்றார். இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவத் துறை ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாயையும் விடாத பாஜக எம்எல்ஏ ‘ராம்.. ராம்..’ சொல்லச் சொல்லி துன்புறுத்தல்!

லக்னோ, பிப். 2 - இஸ்லாமியர்களை, ‘ஜெய் ஸ்ரீராம்...’ என கூறச்சொல்லி, பாஜக-வினர் அடித்துத் துன்புறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வ தாகும். எதிர்க்கட்சியினர் இருக்கும் மேடைகளிலும், வேண்டுமென்றே ‘ஜெய் ஸ்ரீராம்...’ என கூப்பாடு போட்டு, அநாகரிகமாக நடந்து கொள்வார்கள். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது வளர்ப்பு நாயையும், ‘ராம்... ராம்..’ என கூறச்சொல்லி ‘பயிற்சி’ அளித்து வரும் சம்பவம் சமூகவலைதளம் மூலம் தெரிய வந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சேவதா தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர், கியான் திவாரி. இவர் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருவதாக கூறப்படு கிறது. இந்நிலையில், அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுப்பதற்கு முன்பு, ‘ராம்.. ராம்..’ என கூறும்படி பயிற்சி அளித்து வருகிறார். அதாவது பிஸ்கட் வேண்டுமென்றால், ‘ராம்..  ராம்..’ கூறியாக வேண்டும் என்ற  பழக்கத்தை நாயிடம் திணித்துள்ளார். அந்த நாயும், பிஸ்கட்டிற்காக, சற்று நேரம் குறைப்பதும், முனங்குவதுமாக உள்ளது. நீண்ட ‘பயிற்சிக்கு’ பிறகு அந்த நாய்க்கு பிஸ்கட்டை சாப்பிட கொடுத்து வருகிறார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பாஜக எம்எல்ஏ கியான் திவாரியே, அவரது சமூக ஊடகப்  பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.  இதனை பலரும் தங்களது வலை தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பாஜக-வினர் பலர் நாய்க்கு அளிக்கப்படும் ‘ராம்.. ராம்..’ பயிற்சியைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என புல்லரித்து கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

;