states

ஜூலை 17 இல் நீட் தேர்வு

சென்னை,மார்ச் 31-  இந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இள நிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்  நுழைவுத் தேர்வு ஜூலை 17ஆம் தேதி  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தேர்வு களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்றும் மே 7ஆம் தேதியுடன் முன்பதிவு காலம் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் அவகாசம் வழங்கப் படும். நடப்பாண்டில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள தாக கூறப்பட்டுள்ளது. தேர்வு அட்டவ ணையை தேசிய தேர்வாணையம் வெளி யிடும். மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான நேர்முகத் தேர்வு 13 மொழிகளில்  நடத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.