தர்மபுரி, ஜூலை 9- தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் சிடி ஸ்கேன் மற்றும் சி.ஆர்ம்- உடன் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேடை மற்றும் பல்வேறு இடங்களில் மருத்துவ கட்டடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிறன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பைப் பொறுத்தவரை கடந்தாண்டு 36 ஆயிரத்து 206 பேர் விண்ணப்பித்திருந்த னர். இந்தாண்டு பதிவு செய்திருப்பவர்கள் 39 ஆயிரத்து 924. இதில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி 32 ஆயிரத்து 649 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கடைசிநாள் பெற்றோர்களின் வேண்டுகோளின்படி மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் பட்டியல் வரும் 16- ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது” என்றார்.