states

img

மேட்டூருக்கு நீர்வரத்து குறைவு

தமிழ்நாட்டிற்கு காவிரி நதி  நீர் ஆணையம் வினாடிக்கு  5 ஆயிரம் கன அடி தண் ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தர விட்டது. கர் நாடக அரசு கடந்த  29 ஆம் தேதி  முதல் கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர்  திறந்து விடுகிறது. செப்டம்பர் 7 அன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து  217 கன அடி நீர் திறக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் சேலம் மேட்டூர்  அணைக்கான நீர்வரத்து 3,535 கன அடியில் இருந்து 3,031கனஅடி யாக குறைந்துள்ளது. அணை யில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கனஅடி நீர்  திறந்து விடப்படுகிறது.மேட்டூர் அணை நீர்மட்டம் 47.33 அடியிலி ருந்து 46.81 அடியாக குறைந்து, நீர் இருப்பு 15.86 டிஎம்சியாக உள்ளது.