states

அரைவேக்காடுகள் பேசலாம்.. பிரதமர் கூடவா?

சென்னை, ஆக. 11 - தமிழ்நாட்டு பாஜக அரைவேக்காடுகள் போலவே, ஒன்றிய அமைச்சர்கள்தான் பேசுகிறார்கள் என்றால், பிரதமர் மோடியும் முழுமையாக எதுவும் தெரிந்து கொள்ளாமல் பேசியிருப்பதாக, அவரின் நாடாளுமன்ற உரைக்கு தமிழ்நாடு அமைச்சரும், திமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான எ.வ. வேலு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள எ.வ. வேலு, அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: “இந்தியா என்றால் வடஇந்தியா தான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா?” என்று ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கேட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மணிப்பூர் பற்றி பதில் சொல்லத் திறனின்றி தமிழ்நாட்டையும் திமுக-வையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக் கிறார். தமிழ்நாட்டில் பாஜக-வுக்குப் பொறுப்பு வகிக்கும் அரைவேக் காடுகள் போலவே ஒன்றிய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரிய மளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர் களும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. அண்மையில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான நிகழ்வில், நான் கலந்து கொண்டு பேசியதைத்தான் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த நிகழ்வில், தமிழ்நாடு முன்பு இருந்த நிலை என்ன, இப்போதுள்ள நிலை என்ன என்பதை விளக்கும்போது, “ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில்கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே! நான் சொல்வது ஒரு காலத்தில். இந்தி யான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடு தான். முடிந்தால் இதைத் திராவிட நாடாக்க முடியுமா என்று யோசிப் போம்” என்ற நிலையில் தான் முன்பு இருந்தோம் என்றேன்.

ஆனால் இன்று, “ஏதோ தூரத்தில் இருக்கிற ஊர் இந்தியா என்ற நிலைமையை மாற்றி, இன்று இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய நிலைமை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழனுக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் இருக்கிறது” என்று எடுத்துரைத்தேன். இந்தியாவைக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் இருக்கிறது என்பது எப்படி தவறான கருத்தாக இருக்க முடியும்? ஒரு வேளை அந்தப் பொறுப்பை நிறைவேற்றாத ஒன்றிய பாஜக அரசு, நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களும் அதைச் செய்யக்கூடாது என நினைக்கிறதா? நான் பேசியதை முழுமையாக அறியாத அரைவேக்காடுகள் அதனைக் காதில் வாங்காமல், கவனம் செலுத்தாமல் அரசியல் விளம்பரத்திற்காக எதையோ செய்துவிட்டுப் போகட்டும். பிரதமர் கூடவா முழுமையாக எதையும் தெரிந்துகொள்ளாமல் இத்தனை காலம் ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது பரிதாபமும் வேதனையும் படுகிறேன். தமிழ்நாட்டை ஆளும் திமுக ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும், அதுதான் இந்தியாவில் உள்ள மாநிலங்களை எல்லாம் இணைக்கின்ற, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற கட்சி என்ற பயம்தான் பிரதமரையும் அமைச்சர் களையும் இப்படிப் பதற்றத்துடன் பேச வைத்திருக்கிறது. இவ்வாறு எ.வ. வேலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.