states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொதுத்தேர்வை எதிர்  நோக்கியுள்ள மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டு கனியாமூர் பள்ளியில் திங்களன்று (டிச.5) முதல் நேரடி  வகுப்புகளை நடத்த  சென்னை உயர்நீதிமன் றம் அனுமதி வழங்கி, பள்ளியின் “ஏ” பிளாக்  கின் 3-வது தளத்தை சீல்  வைக்க மாவட்ட ஆட்சி யருக்கு உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ர வன் குமார் முன்னிலை யில் 3-வது பிளாக் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஈரான் நாட்டில் உடை சுதந்திரம் வேண்டும் என 2 மாதங்களுக்கு மேல்  பெண்களின் போராட்டம்  நடைபெற்று வரும் நிலை யில், பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் ஆடை  அணிவதை உறுதிப் படுத்தும் “அறநெறி போலீஸ்” பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது. அறநெறி போலீஸ் பிரிவு நிரந்தரமாக கலைக்கப் பட்டதா அல்லது இந்த  நடவடிக்கை தற்காலிக மானதா என்று அறிவிக் கப்படவில்லை.

இந்தி கற்று தருவதாக கூறி ஹைதராபாத் பல்க லைகழகத்தில் பயிலும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது மாண வியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தத தாக கைது செய்யபட்ட பேராசிரியர் ரவி ரஞ் சனை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க  நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கார்த்திகை தீபத்திரு நாளை முன்னிட்டு செவ்வாயன்று மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திரு வண்ணாமலை வழித் தடங்களில் 894 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

திருமண உறவு, காதல்  உறவு சார்ந்த போக்சோ  வழக்குகளில் அவ ரசப்பட்டு கைது நட வடிக்கை எடுக்க கூடாது என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தர விட்டுள்ளார். ஒரு வேளை கட்டாயம் கைது செய்ய வேண்டும் என்  றால் எஸ்பி நிலை அதி காரி அனுமதியின் பேரில் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் அறிக்கையில் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த அதிமுக ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்தது.

ஆந்திராவில் விவசாய பாசனத்திற்காக குழாய்  பதிக்க பள்ளம் தோண்டிய போது 200 ஆண்டுகள் பழமையான 18 தங்க காசு களுடன் கூடிய மண் பானை  கண்டெடுக்கப்பட்டுள் ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் டிசம்பர் 8 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந் திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

;