states

கண்ணுக்கு தெரியாத யானை

தொழிலகங்களில் கண்களுக்கு தெரியாமல் ஊடுருவி சாதி உள்ளது என்பதை விளக்குகிற செய்திக்  கட்டுரை ஒன்று, டெக்கான் கிரானிக்கிளில் வந்துள்ளது.    சாராகான் என்பவர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ கேள்விக்கான பதில் ஒரு உண்மையை வெளிக் கொண்டு வந்துள் ளது. 17,788 உறுப்பினர் நிறுவனங்களில் 19 சதவீதம் மட்டுமே ஏதோ தன்னார்வ நெறிகளை உருவாக்கியுள்ளன. இதுதான் சாதிய பாகுபாடுகள் குறித்த தனியார் தொழிலகங்கள் அணுகுமுறையின் லட்சணம். கார்ப்பரேட் உலகிற்குள் கொஞ்சம் கூட இத்தகைய சிந்தனை கசியவில்லை.  1000 நிறுவனங்களில் கனடா நார்த்தர்ன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் அஜித், ஹான் டோங்கர், ரவி சாக்செனா ஆகியோர் நடத்திய ஆய்வின்படி 1000 அரசு மற்றும் தனி யார் இந்திய தொழிலகங்களில் இயக்குனர வைகளில் 93 %, ‘உயர்’ சாதியினர். 3.8%  மட்டுமே ஓ.பி.சியினர், எஸ்.சி, எஸ்.டி யினர் 3..5 % மட்டுமே.  ‘‘பாச பாகுபாடு’’ (Affinity bias)  என்பது பற்றி இண்டியூட் ஆய்வக இயக்கு நர் தாமஸ் ஐசக் கூறுகையில், ‘‘முடிவெடுக் கும் இடங்களில் பெரும்பாலும் ‘உயர்’ சாதி யினர் இருக்கையில் அவர்கள் கீழே  உள்ள பணி நியமன ஆட்கள், மேலாளர் களுக்கும் சாதி பாகுபாடு இயல்பாகவே தொற்றிக் கொள்கிறது.நியமனங்கள், பதவி உயர்வுகளில் பிரதிபலிக்கவும் செய்கின்றன... இயக்குநரவையில் எந்த சாதி ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே சாதியை சேர்ந்தவரே சிஇஓ-வாக ஆகிறார்’’ என்கிறார். அண்மையில் வெளியான ஐ.ஐ.எம் பெங்களூரு ஆய்வுத் தாளில், ‘‘இரண்டு நிறுவனங்களின் சாதி அடையாளங்கள் ஒன்றாக இருக்கும் போதே இணைப்பு கையகப்படுத்தலுக்கான வாய்ப்பை அதி கரிக்கிறது’’ எனக் கூறப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத யானை என்பது எவ்வளவு ஆட்டம் போடுகிறது!  - கே.எஸ்.