states

திரைப்படம் -தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் திரைப்பட விழாக்களில் பங்கேற்கவியலாத அவலம்

அரசு தலையிட தமுஎகச கோரிக்கை

சென்னை, நவ.19- திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி  நிறுவன மாணவர்கள் திரைப்பட விழாக்களில் பங்கேற்கவியலாத அவலநிலை உள்ளது. இவர்கள் விழாக்களில் பங்கேற்பதற்கு தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு, ஒன்றிய அரசினால்  நடத்தப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது அவர்களது பாடத்திட்ட த்தின் ஒரு பகுதியாகவே இருந்துவருகிறது. அதனாலேயே இவ்விழாவில் பங்கேற்கின்ற மாண வர்களுக்கு வருகைப்பதிவும் வழங்கப்படுகிறது.

  முதலாமாண்டு மாணவர்களைத் தவிர்த்து ஏனையோரிலிருந்து திரைப்பட விழாவில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களைக் கண்டறிவது,  அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்வது, நுழைவுக்கட்ட ணமின்றி / கட்டணமில்லா நுழைவுச்சீட்டுடன் அவர்களை அழைத்துச்செல்வது ஆகிய பணி களை நிறுவனத்தின் நிர்வாகமே மேற்கொள்ளும். மாணவர்களின் பாதுகாப்பிற்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் 10 பேருக்கு ஓர் ஆசிரியர்  என்ற முறையில் அனுப்பி வைக்கும் ஏற்பாடும்  உண்டு. இவற்றுக்கெல்லாம் ஆகும் செலவுத் தொகையில் சிறுவீதத்தை மாணவர்கள் கொடுக்க வேண்டியிருந்தாலும், பெரும்பகுதியும்  நிறுவனத்தைச் சார்ந்ததே. இதற்கான நிதி  ஒதுக்கீடு ஆண்டுதோறும் உண்டு. 1960 ஆம் ஆண்டுமுதல் இருந்துவந்த இந்த நிலைமை, கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தடை பட்டது.  பொதுமுடக்கத்திற்குப் பிறகு நடந்துவரும் கோவா சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பினை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கைவிட்டுவிட்டது.  

இந்த ஆண்டு நவம்பர் 20 - 28 இல்  நடைபெறவிருக்கும் 53ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மாணவர்களை பங்கெடுக்கச் செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இதனால் தனிப்பட்ட முறையில் செலவுகளை ஈடுகட்டும் பொருளியல் பலமுள்ள மாணவர்கள் சிலர் மட்டுமே விழாவில் பங்கேற்கின்றனர். நிறுவனத்தின் அக்கறையின்மையினால் ஆர்வமிருந்தும் பங்கேற்க முடியாத அவலநிலைக்கு மாணவர்கள் ஆளாகியுள்ளனர்.  கோவா சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பதனால் மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பரந்த அனுபவங் களைக் கிட்டாமல் செய்திருக்கும் தமிழ்நாடு அரசு  எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிப் பயிற்சி நிறுவன நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.  மேலும்,  இந்நிறு வனத்தின் மாணவர்கள் கோவா சர்வதேச திரைப்பட விழாக்களில் அரசு செலவில் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.