states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் பெண்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் இல வசமாக பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். பேருந்தில் பயணிகளு டன் மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக் குமார் பயணம்செய்தனர்.

அருணாச்சலப்பிரதேச மாநிலம் மேற்கு காமெங் பகுதியில் ஞாயிறு காலை 6.34 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.2ஆக பதிவானது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஞாயிறன்று ஏற்பட்ட திடீர்  தீ விபத்தில் 6 பேர் காய மடைந்தனர். காயமடைந்த வர்கள் அனைவரும் அருகில் உள்ள சியோன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஒடிசா ரயில் விபத்து நடந்த பாகனகா பஜார் ரயில் நிலை யத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தென் கிழக்குப் பகுதியில் இயங்கும் 24 விரைவு ரயில்களின் சேவை ஞாயிறன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.

தமிழ்நாட்டில் 25 தொகு திகளில் வெற்றி பெறுவதே பாஜகவின் இலக்கு என்று சென்னை யில் நடைபெற்ற கூட்டத் தில் அமித்ஷா கூறினார்.