states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் லேசான அளவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பரி சோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5  அம்ச தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ள  தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழு தியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங் களில் பள்ளி மாணவர் கள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம்  லக்னோவில் உள்ள தனி யார் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆசிரியர் தன்னை துன்  புறுத்தியதாகவும், தேர் வில் காப்பியடித்ததாக பொய் குற்றம் சாட்டிய தாகவும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், பள்ளி தாளாளர், தலை மை ஆசிரியர் என யாரை யும் இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவின் மெர்சஸ் சந்திப்பில் மாநிலத்தின் முதல் செயற்கை நுண் ணறிவு (AI) அடிப்படை யிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களைக் கண்ட றிந்து அதற்கேற்ப வழி யை உருவாக்க முடியும்.

உலகச் செய்திகள்

தேர்வு செய்யப்பட்டதில் இருந்து நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் நாடாளுமன்றத்தில் இருந்து ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் யோஷிகாசு ஹிகாஷிடமி நீக்கப்பட்டிருக்கிறார். யூடியூப் மூலமாக  பிரபலமான இவர் ஜூலை 2022இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்காக உறுப்பினர் நீக்கப்பட்டுள்ளது ஜப்பானில் நடந்திருக்கிறது.

தென் அமெரிக்க நாடான பெருவில் ஜனாதிபதியின் பதவி விலகல் கோரி பெருந்திரள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் லிமாவை நோக்கி வந்த மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் முகாமிட முடிவு செய்திருக்கின்றனர். நாட்கள் செல்லச் செல்ல மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள 12 மாகாணங்களின் சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ள நிலையில் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. ஏராளமான விவசாயப் பண்ணைகளை இழுத்து மூடப்போவதாக அரசு அறிவித்ததற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நைட்ரஜன் அளவைக் குறைக்க எங்கள் வாழ்க்கையில் கைவைக்காதே என்று விவசாயிகள் முழங்கி வருகிறார்கள்.