states

அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

திருவள்ளூர், ஆக 14- பழங்குடி மக்களின் அனுபவ நிலங்க ளுக்கு வன உரிமைச் சட்டத்தின் படி பட்டா வழங்க வேண்டும் என தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின்  9 வது மாநில மாநாடு ஆகஸ்ட் 13, 14 ஆகிய இரண்டு தினங்கள் திருவள் ளூரில் தோழர் வி.சின்னமுத்து நினை வரங்கம் ஐவிஆர் திருமண மண்ட பத்தில்,  மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் கொடியை மூத்த தோழரும் மாநிலக் குழு உறுப்பின ருமான ஆர்.ஏ.லட்சுமண ராஜா ஏற்றி வைத்தார். வரவேற்பு குழுத் தலைவர் ப.சுந்தர்ரா ஜன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.சேகர் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். ஆதிவாசி  மக்கள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் கன்வீனர் ஜிதேந்திர சவுத்திரி துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் வேலை அறிக்கையையும், மாநில  பொருளாளர் ஏ.பொன்னுசாமி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்மு கம் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். வரவேற்பு குழு பொருளாளர் ஜி.சம்பத் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்  

வன உரிமைச் சட்டத்தின் படி பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும், பழங்குடி மக்க ளுக்கு சாதி சான்று வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய வடிவங்களில் வசித்துவரும் கொண்டா ரெட்டிஸ் மக்களுக்கு வழங்கப்பட்ட பழங்குடி இனச் சான்றிதழ் மீது சட்ட விரோதமாக நடைபெறும் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பழங்குடி மக்களாக இருந்தும் ஒன்றிய, மாநில அரசுகளால் பழங்குடி பட்டியலில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்ட பழங்குடி மக்க ளாகிய புலையன், குறவன் இனத்தின் உட்பிரிவுகள், ஈரோடு மாவட்ட மலை யாளி, குறும்பர், நரிக்குறவர், வேட்டைக்காரன் இன மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த அரசு ஊழி யர்கள் மீதான மெய்த்தன்மை விசாரணைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.
 

;