சென்னை, ஜூலை 7 - தமிழக அரசின் ஓய்வூதியர் களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: தமிழக அரசு ஓய்வூதியர்க ளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022-2026ஐ அறிவித்துள்ளது. அதில் ஓய்வூதியர் சங்கத்தின் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. மருத்துவக் காப்பீட்டு திட்டம் மீண்டும் கட்டணமில்லா திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட் டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கான செலவுத் தொகை 4 லட்சம் ரூபாயி லிருந்து 5 லட்சமாகவும், சிறப்பு நோய்களுக்கான தொகை 7.5 லட்சம் ரூபாயிலிருந்து 10லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களில் வெளி மாநிலங்களில் வசிப்போருக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள் ளது. அதை மாநிலத்துக்குள் இருப்போருக்கும் வழங்க வேண்டும். உள்ளாட்சி ஓய்வூதி யர்கள், வாரிய ஓய்வூதியர்க ளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. அந்த நிறுவனங் களின் தலைவர்கள் தனியே ஒப்பந்தம் செய்து கொள்ள அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. இதை காலதாமதமின்றி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற கிராம உதவியா ளர்கள் தற்போது பெயர் குறிப்பிட்டு இணைக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதியர்களும் அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூலை மாதத்திற்குள் சந்தா செலுத்த வேண்டும் என்பது சிரமத் தைத் தரும். 350 ரூபாயாக இருந்த சந்தா தொகை, 497 ரூபாயாக உயர்த் தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். இந்த காப்பீடு திட்டத்தை அரசே முழுமையாக ஏற்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகள் சேர்க்கப் பட்டது, ஓய்வூதியர் சங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இத்திட் டத்தில் சித்த மருத்துவம், ஹோமி யோபதி, ஆயுர்வேதிக் மருத்து வங்களை சேர்க்க வேண்டும். பல் சிகிச்சையை இணைக்க வேண்டும். பல கட்ட போராட்டங்களில் சங்கம் வைத்த கோரிக்கைகள் பல நிறை வேற்றப்பட்டுள்ளன. அதனை பாராட்டுகிற அதேநேரத்தில் பிற கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். சந்தா உயர்வை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.