states

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா: ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு அரசு பதில்

சென்னை,நவ.25- ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமைக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்து வந்தது. ஆன்லைன் சூதாட்டம்காரணமாக காவல் துறையை சேர்ந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுதற்கொலை செய்துகொண்டனர். பெண்களில் சிலரும் இந்த விபரீத விளையாட்டில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்டனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது, ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு  செய்ய, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமை யில் 5 பேர் குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்தார். அந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை  செய்யும் அவசர சட்டம் இயற்றப் பட்டது. கடந்த செப்.26 ஆம் தேதி நடந்த  அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அக்.1 ஆம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப் பப்பட்டது. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டம் அக்.3  ஆம் தேதி அரசிதழிலும் வெளியிடப் பட்டது. அதன்மூலம், தமிழகத்தில்  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு களுக்கான தடை அமலுக்கு வந்தது.   இதன் தொடர்ச்சியாக, அவசர சட்ட த்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதா  கடந்த அக்.19 ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அக்.28 ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த சூழலில், சமீபத்தில் செய்தி யாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, “அவசர சட்டத்துக்கான ஒப்புதலை ஆளுநர் அன்றே அளித்தார். அதில் இருந்த அதே ஷரத்துகள்தான் இந்த சட்ட  மசோதாவிலும் இருக்கிறது. ஆனால்,  இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வில்லை. அதனால் ஆளுநரை சந்திக்க  நேரம் கேட்டுள்ளோம். அவருக்கு சந்தே கம் இருந்தால், அதை தெளிவுபடுத்து வோம்” என்று கூறியிருந்தார்.

ஆளுநருக்கு பதில் 

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட  விளையாட்டு தடை சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு, அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எழுதிய கடிதத்திற்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குழு அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட  விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற் குட்பட்டே கொண்டு வரப்பட்டது. இம் மசோதாவை பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். இருப்பினும், தடை மசோதாவிற்கு ஆளுநர் தாமதமின்றி ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

;