states

img

காவிரி ஆற்றில் கரையாமல் கிடக்கும் விநாயகர் சிலைகள்

ரசாயனம் கலக்கப்பட்டவையா? கும்பகோணம், செப்.26 - காவிரி ஆற்றில் கரையாமல் கிடக்கும் விநாயகர் சிலைகளை அப் புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  நகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்க ளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், விநாயகர்  சதுர்த்தி நாளிலேயே 40 சிலைகள்  கரைக்கப்பட்டன. பிறகு கும்பகோ ணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து, பல்வேறு இந்து அமைப்பு கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருந்த 47 விநாயகர் சிலைகள் கடந்த செப்.20 அன்று மாலை 5 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு, காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் கரைக்கப்பட்டன. குளிக்க வந்தவர்கள் அச்சம் இந்நிலையில், செப்.20 அன்று இரவு கரைக்கப்பட்ட விநாயகர் சிலை களில் பெரும்பாலானவை பாதி கரைந் தும், பாதி கரையாமலும் அப்படியே தண்ணீரில் கிடக்கின்றன. சில சிலை கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக் கின்றன. ஆறு நாட்களுக்கு மேலாக  கும்பகோணம் பாலக்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரையாமல் கிடந்ததால், ஆற்றில் குளிக்க வந்த வர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “களிமண், காகித கூழ் கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகள் உடனே கரைந்து விடும். ஆனால் சில சிலைகள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறதே தவிர, பாதி கரைந்தும் - கரையாமலும் உள்ளன. இந்த சிலைகள் கரையாமல் இருப்பதால், ரசாயனங்கள் ஏதும் பயன் படுத்தப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுகிறது.  இதனால் ஆற்றில் குளிப்பவர் களுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதி கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப் பட்ட அரசுத் துறை அதிகாரிகள் கரை யாமல் உள்ள விநாயகர் சிலையை அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும்”  என்றனர்.