சென்னை,மே 9- திருப்பரங்குன்றத்தில் உணவு பதப்படுத் தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித் துள்ளார். சட்டப்பேரவையில் திங்களன்று கேள்விநேரத்தின் போது திருப்பரங்குன்றம் தொகுதி வளையங்குளத்தில் வாசனை திரவி யத் தொழிற்சாலை அமைக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்குமா என சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் , நறுமணப் பூக்களை பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்கமுன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு மானி யத்துடன் கூடிய கடன் வழங்கி தொழில் தொடங்க அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றார். தமிழ்நாடு அரசு புதிய தொழில் தொடங்கு பவர்களுக்கு மானியத்துடன் கூடிய சுய வேலைவாய்ப்பு கடன் திட்டங்களை செயல் படுத்தி வருவதாகவும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரையில் இத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சுயவேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நிதி ஆண்டில் 34 நிறுவனங்களுக்கு, ஒரு கோடியே 36 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு தொழில் தொடங்க உள்ளதாகவும் கூறினார். முதலீட்டு மானியத் திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் 13 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2 கோடியே 78 லட்சம் மானியமாக வழங்கப் பட்டு தொழில்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், நறுமண பூக்களை பயன் படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க முன்வரும் தனியார் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் வாங்கி தொழில் தொடங்க அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.