states

வறுமையை அளவிடும் தவறான முறைகள் : உலக வங்கியின் அளவீடுகளில் உள்ள குறைபாடுகள்

வறுமையை அளவிடுவதில் உலக வங்கி மற்றும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் (UNDP) போன்ற சர்வதேச நிறுவனங்களின் அணுகுமுறையில் பல குறைபாடுகள் உள்ளன.
முக்கிய விமர்சனங்கள்
சொத்து நிலை கணக்கிடப்படவில்லை
z    தற்போதைய அளவீடுகள் மக்களின் வருமானத்தை மட்டுமே கணக்கில் எடுக்கின்றன.
z    சொத்துக்களின் இழப்பு கணக்கில் எடுக்கப்படவில்லை.
z    நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் ஏற்படும் சொத்து இழப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.
செலவினத்தை வருமானமாக கருதும் தவறு
w    வருமான தரவுகள் கிடைக்காத நிலையில் செலவினத்தை அடிப்படையாகக் கொள்கின்றனர்.
w    கடன் வாங்கியோ, சொத்துக்களை விற்றோ செய்யப்படும் செலவுகளும் வருமானமாக கணக்கிடப்படுகிறது.
w    இது உண்மையான வறுமை நிலையை மறைக்கிறது.
விலைக் குறியீட்டின் குறைபாடுகள்
z     பொது சுகாதாரம், கல்வி போன்ற சேவைகளின் தனியார்மயமாக்கலால் ஏற்படும் செலவு உயர்வு கணக்கிடப்படவில்லை.
z     அடிப்படை பொருட்கள் கிடைக்காமை காரணமாக மாற்று பொருட்களுக்கு செல்லும் செலவு கணக்கிடப்படவில்லை.
z     இதனால் உண்மையான வாழ்க்கைச் செலவு உயர்வு, குறைத்து மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் நிலை 
கடன் சுமை அதிகரிப்பு

w    2012-2018 காலகட்டத்தில் கடன் வாங்கிய கிராமப்புற குடும்பங்கள் 11% அதிகரிப்பு.
w    கடன் தொகை 43% அதிகரிப்பு.
w    விவசாயிகளின் சராசரி சொத்து மதிப்பு 33% வீழ்ச்சி.
ஊட்டச்சத்து குறைபாடு
z    தினசரி 2200 கலோரி பெறாத கிராமப்புற மக்கள் விகிதம் 58%லிருந்து 68% ஆக உயர்வு (1993-94 முதல் 2011-12 வரை).
z    நகர்ப்புறத்தில் 2100 கலோரி பெறாதவர்கள் 57%லிருந்து 65% ஆக உயர்வு.
z    2017-18 முதல் நிலைமை மேலும் மோசமாகி உள்ளது.
உலக வங்கியின் தவறான கணிப்பு
w    2011-12ல் 12% என்றிருந்த “தீவிர வறுமை’2022-23ல் 2% ஆக குறைந்ததாக காட்டுகிறது.
w    நாள் ஒன்றுக்கு 1.90 டாலர் (சுமார் ரூ.53) வருமானம் இருந்தால் வறுமை இல்லை. என்ற குறைந்த அளவுகோல்.
w    உண்மை நிலையை பிரதிபலிக்காத அளவீடுகள்.
வெற்று பொய்ப்பிரச்சாரம்
“கோடிக்கணக்கானோர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர்” என்ற பாஜக கூட்டணி அரசின் கூற்று வெறும் பொய்ப்பிரச்சாரமே. ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி 
இலக்குகளை (SDGs) நிறைவேற்றியதாக காட்ட நாடுகள் போட்டியிடும் நிலையில், இது போன்ற தவறான கணக்கீடுகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (அக்.20) இதழில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் இருந்து