states

அரசியல் பழிவாங்கல் : சிபிஎம் கண்டனம்

சென்னை, மார்ச் 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்ட னை விதித்து, 30 நாட்கள் ஜாமீன் வழங்கி தண்டனையை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.  இந்நிலையில், மோடி அரசு அவரது மக்களவை உறுப்பினர் பத வியை அவசரஅவசரமாக பறித்துள்ளது என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  குற்றம் சாட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கை களையும், செயல்பாட்டையும் விமர்சிப்ப வர்களை மோடி அரசு தனது ஆட்சி அதி காரத்தை பயன்படுத்தி அரசியலாக பழி வாங்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இத்தகைய செய லுக்கு மத்திய புலனாய்வுத் துறை, அம லாக்கத்துறை போன்றவைகள் பயன் படுத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சி யாகவே மேல்முறையீட்டிற்கு உரிய கால அவகாசம் இருந்தபோதிலும்,  ராகுல் காந்தியின் பதவியை பறித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துத் துறை களிலும் தோல்வி கண்டுள்ள பாஜக அரசு கலக்கமடைந்துள்ளது. இதனை மறைக்க எதிர்க்கட்சியினர் மற்றும் மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்கள் மீது பழி வாங்கும் படலத்தை தொடர்ந்து கொண்டுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத, அராஜக, அச்சுறுத்தல் நட வடிக்கைகளை அனுமதிக்க இயலாது. எனவே, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு ஒன்றிய அரசை வலி யுறுத்துகிறது. மோடி அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக வலுவாக குரல் எழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநா யக சக்திகளையும் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

;