states

img

சிஐடியு நடைபயணம் திருச்சியில் இன்று சங்கமம்

மதுரை,மே 29-  தமிழகத்தின் 7 முனை களிலிருந்து புறப்பட்ட சிஐ டியு நடைபயணம் செவ்வா யன்று (மே 30) திருச்சியில் சங்கமிக்கின்றன. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற் கின்றனர். குறைந்தபட்ச ஊதியம் மாதம்  ரூ.26 ஆயிரம் வழங்க சட்டம்  இயற்றவேண்டும். பொதுத்துறை  நிறுவனங் களை தனியார்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் முறைசாரா தொழிலாளர் களுக்கு தேசிய நிதி ஆணை யம் ஏற்படுத்தி  நலவாரிய குறைபாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளி ட்ட உழைக்கும் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க  மையம் (சிஐ டியு) சார்பில் தமிழ்நாட்டின் ஏழு முனைகளிலிருந்து திருச்சி நோக்கி நடைபய ணப் பிரச்சாரம் மே 19 அன்று துவங்கியது.

திருவொற்றி யூர், கோயம்புத்தூர், கட லூர், மீஞ்சூர், களியக்கா விளை, தென்காசி, ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து பொதுக்கூட்டங்களுடன் நடைபயணம் எழுச்சிகரமாக தொடங்கியது. நடைபயணக் குழுவின ருக்கு மாவட்டங்களில் வழி நெடுகிலும் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டு வரு கிறது. பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் வாழ்த்தி வர வேற்கின்றனர். ஒன்றிய பாஜக அரசின் ஆட்சியில் விலை உயர்வால் மக்கள் படும் அவதிகளை பிரச்சாரக் கூட்டங்களில் பேசினர். மோடி அரசு கார்ப்பரேட் களுக்கு ஆதரவாகவும் மக்க ளுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதை பிரச் சாரக் குழுவினர் எடுத்துக் கூறினர். இதற்கு மக்கள்-தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. எரிபொ ருள் விலை உயர்வால் மோடி அரசு மீது மக்களிடம் கோபம் இருந்ததை காணமுடிந்தது. மாநிலம் முழுவதும் 2100 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு, செவ்வா யன்று திருச்சியில் கூடுகின்ற னர். நடைபயண பிரச்சார  நிறைவு பேரணி-பொதுக் கூட்டம்,  திருச்சி உழவர்  சந்தையில் மே 30 அன்று  மாலை 4 மணிக்கு துவங்கு கிறது. புத்தூர் நால்ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  பொதுக் கூட்டத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் உள்ளிட்டோர் உரை யாற்றுகின்றனர்.

;