states

ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை, மே 11-   இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13  ஆண்டுக்காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது. ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டு மின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் மே 23-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது.  இதற்கான இந்திய அணியில் அரியலூர் மாவட் டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியை சேர்ந்த  கார்த்திக் இடம்பிடித்துள் ளார். இவர் இந்திய அணி யில் முன்கள வீரராக தேர்வு  செய்யப்பட்டுள்ளார். மிகவும்  ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக், முதல் முறையாக இந்திய அணி க்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். மற்றொரு தமிழக வீரரான  மாரீஸ்வரன் கோவில் பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை தீப்பெட்டி ஆலை தொழிலாளி ஆவார். சிறு வயதில் இருந்து ஹாக்கி விளையாடுவதில் அதிக ஆர் வம் கொண்டிருந்த மாரீஸ்வ ரனுக்கு நிறைய ஸ்பான்சர் கிடைத்தனர். கனிமொழி எம்.பி., கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் உதவிகள் வழங்கியுள்ளனர்.