states

ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி

தேனி, டிச.24- தேனி மாவட்டம் , குமுளி மலைப் பாதையில் ஐயப்ப பக்தர்கள் வந்த  கார் தடுப்புச்சுவரில் மோதி 100அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில்  8 பேர் உயிரிழந்தனர். 2  பேர் தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார்கள். ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு காரில்  சென்றனர். வெள்ளிக்கிழமை  சபரி மலையில் தரிசனம் முடித்துவிட்டு இரவில் ஆண்டிபட்டி நோக்கி வந்து  கொண்டிருந்தனர்.இரவு 11.50 மணி யளவில் தமிழக-கேரள எல்லையான  குமுளியைக் கடந்து மலைச்சாலை யில் கார் வந்து கொண்டிருந்தது. காரை பிச்சம்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (42) என்பவர் ஓட்டி வந்தார். கார் மலைப்பாதையின் முதல்பாலத்தின் அருகில் உள்ள கொண்டைஊசி வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில்  தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு 100அடி பள்ளத்தில் கார் பறந்து சென்று விழுந்தது. பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரும் ராட்சத குழாய்கள் மற்றும் அதன் தடுப்புச்சுவ ரில் மோதிய கார்  முற்றிலும் சிதிலம டைந்தது. இந்த விபத்தில் காரில் பய ணித்த சக்கம்பட்டியைச் சேர்ந்த முனி யாண்டி (55), ஆண்டிபட்டி பத்திர ஆபிஸ் சாலையைச் சேர்ந்த தேவ தாஸ் (55), சிவக்குமார் (45), மறவபட்டி சாவடி தெருவைச் சேர்ந்த கன்னிச்சாமி (55), ஆண்டிபட்டி மயானச்சாலை யைச் சேர்ந்த நாகராஜ் (46), சண்முக சுந்தரபுரம் கிராமத்தை சேர்ந்த  வினோத் (47), டி.பொம்மிநாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்  வன் (45) உள்ளிட்ட 8 பேர்  அதே இடத்  தில் உயிரிழந்தனர்.

கார் ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் (42) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தார். மேலும் காரில் பயணித்த ஆண்டி பட்டி கோழிப்பண்ணை தெருவை  சேர்ந்த ராஜா(40)  மற்றும் அவருடைய மகன் ஹரிஹரன்(7) ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்  துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கார் விபத்தில் சிக்கியதும் பின்  னால் காரில் வந்து கொண்டிருந்த வர்கள் உடன் 108 ஆம்புலன்சிற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்த னர். இதனைத் தொடர்ந்து குமுளியில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக போலீசார், வனத்துறையினர், தீய ணைப்புத்துறையினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சிதிலமடைந்த கார் மற்றும் உடல்  கள் மீட்கப்பட்டன. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் 

தகவலறிந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி  மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன்  ஆகியோர்  மருத்துவமனையில் சிகிச் சைப் பெற்று வருபவர்களுக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும்   ஆறுதல் கூறினர். சபரிமலை சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கி 8 பேர் உயி ரிழந்தது ஆண்டிபட்டி பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.