states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கல்லூரி திறப்பு விழாவின் பொழுது மத்தி யப்பிரதேச பாஜக எம்எல்ஏ பன்னாலால் லக்‌ஷ்யா,”டிகிரி வாங்கி ஒரு பயனும் இல்லை. மாணவர்கள் பஞ்சர் கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம்” என்று கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஹரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - புனே விரைவுச் சாலையில் பேருந்தும் டிராக்ட ரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். 

பீகார் பிராந்திய கட்சிகளில் ஒன்றான விகாஷீல் இன்சான் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான முகேஷ் சஹானியின் தந்தை  சொந்த வீட்டில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

தில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரகண்ட்  பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டது தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடை பெற்று வருகிறது. 

“கேதார்நாத் கோயிலில் இருந்து 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப் படாதது ஏன்” என சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ் வரானந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 

“விதிகளின் படி 2015ஆம் ஆண்டிற்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம்” என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வாசர்மா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.