states

ராகுல் வழக்கில் ஏப். 20 தீர்ப்பு!

சூரத், ஏப். 13 - குற்றவியல் அவதூறு வழக்கில் தமக்கு  விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது, சூரத் அமர்வு  நீதிமன்றம் ஏப்ரல் 20 அன்று தீர்ப்பளிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வழக்கில் ராகுல் தரப்பில் வழக்கறி ஞர் சீமா வாதிடுகையில், “அவதூறு சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே புகார் அளிக்க முடியும். எனவே, பூர்ணேஷ் மோடி புகார் அளிக்க சட்டத்தில் இடம் உள்ளதா? என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். மோடி என்ற குடும்பப் பெயரை அவதூறு செய்யும் நோக்கம் பேச்சாளரிடம் இருந்ததா என்பதைக் கண்டறிய ராகுல் காந்தியின் உரையை சூழலுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்ய  வேண்டும். இந்த வழக்கு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சன ரீதியாக பேசியதன் விளைவு அன்றி வேறில்லை” என்றார். ராகுலின் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.