உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பல ஆண்டு களாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் போராடி வருகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையும் ஆகும். இதனை வலியுறுத்தி ஏப்ரல் 25 (செவ்வாய்) அன்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம் மற்றும் மாநில பொ துச் செயலாளர் ச.சிவக்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசார ணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழி கள் வழக்காடு மொழியாக இருக்கின்றன. அந்தந்த மாநில மொழிகள் உயர்நீதிமன் றங்களிலும் அலுவல் மொழியாக்கப்படும் போது, மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 348(2)-ன்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந் தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக் கிறது. இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று அமல் படுத்த வேண்டும் என்று 1965-ல் எடுக்கப் பட்ட அப்போதைய அமைச்சரவையின் முடிவு இன்று வரை நீடிக்கிறது. அரசிய லமைப்புச் சட்டத்தின் ஷரத்து 348(2)-ஐ பயன்படுத்தி ராஜஸ்தான், அலகாபாத், மத்தி யப் பிரதேசம், பாட்னா ஆகிய உயர்நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். இந்தி பேசக் கூடிய மாநிலங்களில், இந்தி உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட்டு அரை நூற்றாண்டுகள் ஆகிறது.
ஆனால் இந்தி பேசாத பிற மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழிகள் அலுவல் மொழியாக்கப் பட வேண்டும் என்கிற கோரிக்கையை அம லாக்காமல் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்ற மும் பாகுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் நீண்ட காலமாகவே, உயர்நீதிமன்றகளில் தங்கள் தாய்மொ ழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இந்த கோரிக்கை அந்தந்த மாநில மக்களின் ஜனநாயக உரிமை சார்ந்தது என்பதை புரிந்து கொள்ளாமல், நடைமுறை சிக்கல்களை காரணங்களாக கூறி உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் இந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. நீதிபதி என்.வி.ரமணா உச்சநீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாக இருந்த போது, ‘உயர்நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதன் மூலம் நீதி வழங்குவதை எளிமையாக்க வேண்டும்’ என கூறினார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘அனைத்து மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக’ கூறியுள்ளதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அனைத்து மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கொண்டு வருவதற்கான சாத்தி யங்கள் இருக்கும் நிலையில், உயர்நீதி மன்றங்களிலும் அந்தந்த மாநில மொழி களை வழக்காடு மொழியாக சட்டப்பூர்வ மாக அறிவிக்காமல் இருப்பது நியாய மில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களின் உரிமை பிரச்சனையாக கருதி, 2006 லேயே அன்றைய தமிழக அரசு நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியது. அப்போதைய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற பிறகும், அதை நிறைவேற்ற போதுமான கட்ட மைப்புகள் இல்லை என்று காரணம் கூறப் பட்டு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது. மேற்படி தீர்மானம் நிராகரிக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து மைய சட்டங்களையும் தமிழில் மொழிப் பெயர்ப்பது, இதற்கு திறமையான போது மான அளவிற்கு மொழிபெயர்ப்பாளர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்துவது, தமி ழிலே சட்ட மென்பொருள்கள் உருவாக்கு வது, குறிப்பெடுக்க தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், அனைத்து மாநில உயர்நீதிமன்ற தீர்ப்புக ளை தமிழ் சட்ட இதழ்கள் (Law Journals) வழியே கொண்டு வருவது போன்ற நட வடிக்கைகள் மூலம் தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியும்.
இதற்கு ஒன்றிய - மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்குவதன் மூலம்தான் மக்க ளின் நீண்ட கால கோரிக்கையை வென் றெடுக்க முடியும். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு பல நூறு கோடிகள் நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு, அந்தந்த மாநில மொழிகளில் உயர்நீதிமன்றம் செயல்பட நிதி ஒதுக்க மறுத்து பாகுபாட்டுடன் செயல் ்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழி யாகவும் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நீண்ட காலமாக கோரி வருகிறது. ஜனநாய கத்தில் நிர்வாகத்தின் பணிகளும், நீதிமன்ற நடைமுறைகளும் மக்களின் மொழியில் தான் இருக்க வேண்டும். மக்களின் மொழி யில் நீதி பரிபாலனம் நடக்கும் போதுதான் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகத்தின் மாண்புகளும் இன்னும் சரியான புரிதலோடு மக்களுக்கு போய்ச் சேரும்; அதுவே உண்மையான ஜனநாயகமாக இருக்கும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாட்டு மக்களின் இந்த நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஏப்ரல் 25 (செவ்வாய்) அன்று அனைத்து நீதிமன்றங்க ளின் முன்பு கோரிக்கை முழக்க போராட் டத்தை நடத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.