states

தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 27- 2023-24ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெ ட்டில் அனைத்து பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும் இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செய லாளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தின் 2023-24ற்கான பட்ஜெட் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல் படும் அனைத்து பள்ளிகளும், பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பையும் மேலும் இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நிர்வாகரீதியாக மேற்கொள்ளப்படும் மாற்றமாக கருதப்பட்டாலும், ஏற்கனவே இருந்த துறையின் கீழ் கிடைக்கப்பெற்ற கூடுதல் முக்கியத்துவம் குறையா வண்ணம் இப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். அடிப்படை தேவை, உட்கட்டமைப்பு வசதி,  ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கையை பலப்படுத்துவது உள்ளிட்டவற்றையும் கவனித்து நிறைவேற்ற வேண்டும். தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967  கோடி என மொத்தம் ரூ.47,266 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டினை ஒப்பிடும் போது கூடுதலான நிதியாகும்.  அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டிட வும் ரூ.7000 கோடி செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் வரும் நிதியாண்டில், புதிய வகுப் பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் ரூ.1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.  பல்வேறு அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும், தகுதிவாய்ந்த மாண வர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடி பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படு வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும். மற்றும் புதிய நூலக உருவாக்கம், மேலும் 54 அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்த ரூ.2,783 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகையும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயி ரம் உதவித்தொகையும் வழங்க ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நவீன வசதி களுடன் ஆதி திராவிடர், பழங்குடியினர் புதிய விடுதிகள் கட்ட ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. பல்வேறு அறிவிப்புகள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அரசு  பள்ளிக் கல்லூரிகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிய மனம், விடுதிகள், வகுப்பறைகள் உரு வாக்கப்பட வேண்டும். விடுதி மாணவர் களுக்கு ஒரு நாளுக்கான நிதியை ரூ.100  உயர்த்தி வழங்க வேண்டும். மூவளூர்  இராமாமிர்தம் திட்டத்தை அரசு உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எந்த ஒரு முறை கேடும் நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும்.   இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;