states

சாதிய வன்மத்துடன் பேசும் அரசு கல்லூரி பேராசிரியர்

தஞ்சாவூர், அக்.6- மாணவ, மாணவிகள் இடையே சாதிய மற்றும் மத மோதல்களை தூண்டும் வகையில், தொடர்ந்து பேசி வரும், கும்பகோணம் அரசு கலைக்  கல்லூரி புவியியல் துறை உதவி பேராசிரியர் எஸ்.வடிவேல் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என, கல்லூ ரியில் புவியியல் துறை முதுஅறிவியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் அ.இளந்தென்றல் என்பவர் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  சாதிய படிநிலைகளை நியாயப் படுத்தியும், சாதிய வேறுபாடுகள் இருக்க வேண்டுமென்றும், சிறு பான்மை மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாண வர்களிடம் பாடம் நடத்தும் பேராசிரி யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி 

இதுகுறித்து, தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டத் தலைவர் கே.அபி மன்னன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அரசு ஊதியம் பெறும் பேராசிரியர் சாதிய, மத வன்மத்துடன், தொடர்ச்சியாக பேசி வருவதாக மாணவர் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து உயர் கல்வித் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். பேராசிரியர் தவறு இழைத்தது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல்லூரி பேராசிரியர் சாதி,  மதத்திற்கு அப்பாற்பட்டு  கல்வி புகட்டு பவராக இருக்க வேண்டும். இதே பேரா சிரியர் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு இதே போன்ற புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.  கல்வி நிலையங்களில் இத்தகைய சாதியப் பாகுபாட்டுடன் பேராசிரியர் நடந்து கொள்வது குறித்து, மாணவர் கூறியுள்ள புகார் மீது கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் உயரதிகாரிகள்  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

 

;