states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விளைவாக கோடிக் கணக்கானவர்கள் சட்டப்பூர்வ நன்மைகளை இழக்கின்றனர். 81.4 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ மானிய விலையிலான உணவு தானியங்கள் தருவதை மோடி அரசு கை கழுவியது. இப்பொழுது மேலும் 14 கோடி பேர் மக்கள் தொகையில் இணைந்துள்ளனர். இவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இது கிரிமினல் குற்றம்.
உணவு தானியங்கள் சந்தையில் மிக அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில்! இந்த முரண்பாடு புரியாத புதிர். ஏற்றுமதிக்கு தடை. கையிருப்புக்கு வரையறைகள். இந்த முரண்பாடுகள் சொல்வது என்ன? தானியங்களின் வர்த்தக கட்டுப்பாடு திறமையானதாக இல்லை. அல்லது உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன.