states

img

போர் ஹெலிகாப்டரை தாங்கி வலுவை நிரூபித்தது விக்ராந்த்

கொச்சி, ஜுன் 1- ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் கடற்படை மீண்டும் தங்கள் வலுவை நிரூபித்தன. எம்எச்60ஆர் ஹெலிகாப்டர் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான விக்ராந்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டது. இந்த சாதனை கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக் 29கே போர் விமானம் இரவு நேரத்தில் தரையிறங்கியது. இதற்குப் பிறகு, கடற்படை மற்றொரு முக்கிய இலக்கை அடைந்தது. எம்எச்60ஆர் ஹெலிகாப்டர்கள் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போருக்குப் பயன்படுத்தப் படுகின்றன. இது எந்த காலநிலையிலும் பயன்படுத்தப்படலாம். ஐஎன்எஸ் விக்ராந்த் கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கட்டுமான செலவு 20,000 கோடி. 62 மீட்டர் நீளம், 59 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரம் கொண்ட விக்ராந்த்-இன், மேல் தளத்தில் 10 போர் விமானங்களையும், கீழ் தளத்தில் 20 விமானங்களையும் நிலைநிறுத்த முடியும். இது 88 மெகாவாட் திறன் கொண்ட நான்கு எரிவாயு விசையாழி இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 28 மைல், பயண வேகம் 18 மைல். ஒரே பயணத்தில் 7,500 கடல் மைல்கள் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

;