states

img

ரூ.14 கோடி தேர்தல் நிதி எங்கே? பாஜக தலைவர்களை துரத்தும் கேள்வி....

கோழிக்கோடு:
“ரூ.14 கோடி பணத்தையும் சுருட்டி ... வாக்குகளையும் விற்கும் தலைவர்கள் ... அவர்களைப் பாதுகாக்க வேண்டாம்” - இது பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன், மாநில தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக  சமூகஊடகங்களில் அக்கட்சியினர் நடத்தி வரும் வலுவான பிரச்சாரம். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு பகுதியும் இந்த சமூக ஊடகப் போரில் ஈடுபட்டுள்ளது.

கொடகரயில் தேர்தல் நிதியாக கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளை, ஹெலிகாப்டரில் பறப்பது குறித்துஉயர்மட்டக்குழுவும் தேசியத் தலைவர்களும் அறிந்திருக்கிறார்களா என்பது சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் முக்கியமான கேள்வியாகும். சுரேந்திரனும் முரளீதரனும் தந்திரமான, சோம்பேறித்தனமான தலைவர்கள். அவர்களின் திமிர் தனமான பாணியை சங் பரிவார்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்களது ஆணவ அரசியலையும் விமர்சித்து அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். “அவர்கள் தொடர்ந்து தங்கள் எதிரிகளை விமர்சிக்கிறார்கள். ஆனால் குறைந்தபட்சம் கண்ணாடியில் உங்கள் முகங்களை பாருங்கள், தலைவர்களே.” என்று ஓர் பதிவுக்கு ஏராளமானோர் பின்னூட்டக் குறிப்புடன் பகிர்ந்து வருகின்றனர். தேர்தலுக்கு மத்திய தலைமை எவ்வளவு நிதி வழங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தக் கோரும் சவாலையும் சிலர் எழுப்புகின்றனர்.

;