states

img

அழுத்தத்தை சமாளிக்க கடவுள் நம்பிக்கை வேண்டுமாம்

திருவனந்தபுரம் மகாராஷ்டிரா மாநிலம் புனே வைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் பேராயில் (26) பன்னாட்டு ஆலோசனை நிறு வனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கில் (EY) பட்டயக் கணக்காளராக (சிஏ) பணிபுரிந்து வந்தார். பணி யில் சேர்ந்து 2 மாதமே ஆன நிலை யில், கடந்த ஜூலை 20 அன்று பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள் ளார். அன்னா உயிரிழந்து 2 மாதங்க ளாகும் நிலையில், அவர் பணி புரிந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு அன்னாவின் தாயார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், அந்த நிறுவனத்தின் அதிக பணிச் சுமையாலே தன் மகள் உயிரிழந்ததாகவும், அவருடைய இறுதிச்சடங்குக்குக்கூட நிறு வனத்தில் இருந்து யாரும் வர வில்லை. ஒன்றிய அரசும் கண்டு கொள்ளவில்லை எனவும் தெரி வித்திருந்தார். இந்தக் கடிதம் இணையத்தில் எதிர்வினை யாற்றியது. 

இந்நிலையில், அன்னா செபாஸ் டியன் உயிரிழந்தது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,“சிஏ படித்த பெண் ஒரு வர், நிறுவனம் ஒன்றில் பணிச் சுமையை சமாளிக்க முடியாமல் இறந்ததாக சமீபத்தில் செய்தி ஒன்றுவந்தது. எவ்வளவு படித் தாலும் என்ன வேலை செய்தாலும் மனதில் ஏற்படும் எவ்வளவு பெரிய அழுத்தத்தையும் எடுத்துக்கொள் ளக்கூடிய உள்சக்தி வர வேண்டும். அது தெய்வீகம் மூலமாகத்தான் வரும். இறைவனை நம்பு, இறை வனை நாடு என பெற்றோர் சொல் லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். ஆன்மீக சக்தி வளர்ந்தால்தான் அழுத்தத்தைத் தாங்கும் அள வுக்கு உள்சக்தி வளரும். கல்வி நிறுவனங்கள் ஆன்மீகத்தை சொல் லித்தர வேண்டும்” என சர்ச்சைக்கு ரிய வகையில் பேசினார்.

அன்னா செபாஸ்டியன் இறப்பி ற்கு ஆறுதல் தெரிவிக்காமல், உயி ரிழந்த பெண்ணை விமர்சித்தும், கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் கார்ப்பரேட்டிற்கு ஆதரவாக பேசி யுள்ளதற்கும் நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன.

சிபிஎம் எம்.பி., கண்டனம்

இந்நிலையில்,”பணி அழுத்தத் தால் உயிரிழந்த பட்டயக் கணக்கா ளர் அன்னா செபாஸ்டியனை அவ மதித்ததற்காக ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னி ப்புக் கேட்க வேண்டும்” என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை எம்.பி.,சிவதாசன் (கேரளா) கண்டனம் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து சிவதாசன் எம்.பி., மேலும் கூறுகையில், “அழுத்தங்க ளைச் சமாளிக்க முடியாமல் அன்னாவின் மரணம் நிகழ்ந்ததாக நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது கார்ப்பரேட் சுரண்டலுக்கு உயிரி ழந்த பெண் ஊழியரை அவ மதிக்கும் செயலாகும். வேலை யில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க வீட்டில் இருந்தே கற்றுத்தர வேண்டும் என்று கூறி அன்னாவின் குடும்பத்தை குற்றம் சாட்டும் வகையில் ஒன்றிய நிதி யமைச்சர் பேசியுள்ளார். அழுத் தத்தை எதிர்கொள்ள கடவுளை நம்புங்கள் எனக் கூறும் நிர்மலா சீதாராமன், சுரண்டல் வேலைச்  சூழலை மறைத்து கார்ப்பரேட் நிறுவனங்களை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார். மகாராஷ்டிரா பாஜக அரசு அறிவித்துள்ள விசார ணையின் வெற்றுத்தன்மையும் நிர்மலா சீதாராமனின் அறிக்கை யின் மூலம் அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்டவரைக் குற்றம் சாட்டி அரசு அறிக்கை விடுவதால் நீதி கிடைக்காது என்பது இதி லிருந்து தெளிவாகிறது. நிர்மலா சீதாராமன் தனது மனிதாபிமான மற்ற கருத்தை வாபஸ் பெற்று அன்னாவின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.