states

img

பாஜக வயநாடு மாவட்டத் தலைவரிடம் லஞ்ச வழக்கில் காவல்துறை விசாரணை....

வயநாடு:
ஜனாதிபத்ய ராஸ்டிரிய சபா (ஜேஆர்எஸ்) சி.கே.ஜானுவை தேஜகூ வேட்பாளராக நிறுத்த பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக வயநாடு மாவட்டத் தலைவர் சஜி சங்கரை குற்றப்பிரிவு காவல்துறையினர் புதனன்று (ஜூலை 21) விசாரித்தனர்.

கேரள சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தேஜ கூட்டணியிலிருந்து ஜேஆர்எஸ் விலகியது. மீண்டும் அந்த கட்சியை தேஜ கூட்டணிக்கு கொண்டுவர பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் ஜேஆர்எஸ் தலைவர் சி.கே.ஜானுவுக்கு ரூபாய் பத்து லட்சம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுஎழுந்தது. இதுகுறித்த ஆதாரமாக கே.சுரேந்திரனின் குரல் பதிவுகளை ஜேஆர்எஸ் பொருளாளர் பிரசீதா அழிக்கோடு வெளியிட்டார். பணப் பரிமாற்றம் குறித்து பெரும்பாலான பாஜக தலைவர்கள்அறிந்திருந்ததாகவும் பிரசீதா குறிப்பிட்டிருந் தார்.இதுகுறித்து எம்.கணேஷ் உள்ளிட்ட பாஜக மாநில நிர்வாகிகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டனர். பத்தேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ.3.5 கோடி செலவிடப் பட்டதற்கான ஆதாரங்களும் விசாரணைக் குழுவுக்கு கிடைத்துள்ளன.

இந்த தொகையில் இருந்து சி.கே.ஜானுவுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு மேலும்தலைவர்களை வரவழைக்க விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது.பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் பிரசாந்த் மலவயல், மண்டல செயலாளர் கே.பி.சுரேஷ் மற்றும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் எம்.கணேஷ் ஆகியோரிடம் விசாரித்ததில் இருந்து பணத்தைப் பற்றிய முக்கியமான தகவல்கள் விசாரணைக் குழுவுக்கு கிடைத்துள்ளன. சில சாட்சியங்களை பதிவு செய்த பின்னர், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கே.சுரேந்திரன் மற்றும் சி.கே.ஜானு ஆகியோர் விசாரிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. விசாரணைக் குழு முன் ஆஜராக அவர்களுக்கு அடுத்த சில நாட்களில் நோட்டீஸ் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

;