states

img

ஊடகங்கள் கதைகளை புனைகின்றன கேரள உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்

கொச்சி, பிப்.5- கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, முதல் வரை சந்தித்தது குறித்து  ஊடகங்களில் புனையப் பட்ட செய்திகளை உயர் நீதி மன்றம் கடுமையாக விமர் சித்துள்ளது. வழக்கறிஞர் லஞ்ச வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.மணி குமார் சனிக்கிழமை காலை எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் பின ராயி விஜயனை சந்தித்துப் பேசியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதன்மீது, உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறான செய்திக்குறிப்பாக ஒரு  சுய அறிக்கை வௌியிட் டுள்ளது.  அதில், “முதல்வரை சந்தித்தது தொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கும் உண் மைக்கும் தொடர்பில்லை. அந்த செய்திகள் ஊடக  நெறிமுறைகளை மீறுவ தாகும் என தெளிவுபடுத்தி யுள்ளது.  அது சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர் புபடுத்தி புனையப்பட்ட கதையாகும். இது நல்ல செய்தியை வழங்கும் முறை அல்ல. தலைமை நீதி பதி தனது மகளின் திருமணத் திற்கு முதல்வரை அழைப்ப தற்காக சென்றதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், தவறான  செய்திகள் பரப்பப்படு வதற்கு நீதிமன்றம் தனது  அதிருப்தியையும் தெரி வித்துள்ளது.

;