states

img

முதல்வரை அழைத்த இஹ்ஸானாவுக்கு காவல்துறையினர் வழங்கிய ஸ்மார்ட் போன்.....

ஆலுவா:
ஆன்லைனில் படிக்க இஹ்ஸானா-விடம் தொலைபேசி இல்லை. கேரளமுதல்வரின் அலுவலகத்தை தொடர்புகொண்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் தான், படிக்க ஒரு போன் தேவை என்பதை கூறினார். காவல்துறையினர் உடனடியாக ஒரு புதிய ஸ்மார்ட் போனுடன் அவரது வீட்டிற்கு வந்தனர்.

கேரளாவில் நடந்தது இந்த வியத்தகு நிகழ்வு.கேரளாவில் உள்ள ஆலுவா கம்பெனிப்படியில் மூன்றாம் வகுப்பு மாணவி இஹ்சானாவுக்கு தாய்  மட்டுமே உள்ளார். பள்ளி திறக்கும் போது ஆன்லைன் வகுப்பைக் கேட்க தொலைபேசி இல்லை. முன்பு இருந்ததுசேதமடைந்துவிட்டது. புதியதை வாங்கவும் அம்மாவுக்கு வழியில்லை. அப்போதுதான் அந்த குழந்தை தொலைபேசி எண்ணைத் தட்டி முதல்வரின் அலுவலகத்தை அழைத்தார். தொலைபேசியை எடுத்த அதிகாரி, ஏ.ஆர் முகாம் உதவி ஆய்வாளர் ஜே. ஷாஜிமோனிடம் இந்த  சம்பவம்குறித்து விசாரிக்க அறிவுறுத்தினார். அவர் விசாரித்தபோது, சம்பவம் உண்மைஎன்றும் தொலைபேசி வாங்கி கொடுக்க லாம் என்றும் கூறினார்.கேரள காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஆர்.பிஜு, மாவட்டச் செயலாளர் ஜே.ஷாஜிமோன், காவல்துறை சங்க  மாவட்டச் செயலாளர் எம்.எம்.அஜித் குமார், எம்.வி.சனில் ஆகியோர் தொலைபேசியுடன் வீட்டிற்குவந்தனர். “நன்றாக படி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்”என்று கூறினர். அதோடு காவல்துறை அதிகாரிகள் புத்தகங்களும் பேனாக்களும் வாங்கி கொடுத்துவிட்டு திரும்பினர். இப்போது நன்றி தெரிவிக்க இஹ்ஸானா முதல்வரை அழைக்க தயாராக இருக்கிறார்.

;