states

img

ஏழைக் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் உதவி.... ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வரின் அறிவிப்புகள்....

திருவனந்தபுரம்:
புதிய அரசாங்கத்தின் முதல் கடமைவேலையின்மைக்குத் தீர்வு காண்பதுதான் என்று முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறைகள் பலப்படுத்தப்பட்டு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2500 ஆக உயர்த்தப்படும். புதிய அரசாங்கத்திற்கு வளர்ச்சி மற்றும் நலத்திட்டக் கொள்கை உள்ளது. மேலும், பொது நல மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு மாற்று அணுகுமுறை ஊக்குவிக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார். அரசின் கொள்கை அறிவிப்பு உரை நிகழ்த்திய ஆளுநருக்கு நன்றி தெரிவித்து வியாழனன்று பேசுகையில் முதல்வர் இதைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பெண்கள், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், மீனவர்கள் மற்றும் முதியவர்களுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். கடல், கடலின்  குழந்தைகளான மீனவர்களுக்குச் சொந்தமானது என்பதை அரசு உறுதி செய்யும்.கேரளத்தின் குறிப்பிட்ட பிரச்சனை களுக்குத் தீர்வு காண்பது மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும். ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நலத் திட்டங்கள் பலப்படுத்தப்பட்டு மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும். துயரங்களைப்பார்த்து ஒருபோதும் தலையில் கைவைத்து அழுததில்லை. மக்களை அணிதிரட்டி அவற்றை வெற்றி கொண்டோம். சில பலவீனங்கள் நீடிக்கின்றன. அவை களையப்பட்டு நவ கேரளத்தை மேலும் முன்னெடுப்போம் என்று முதல்வர் கூறினார்.

முதல்வரின் அறிவிப்புகள்
படித்தவர்களுக்கு வேலை வழங்க 15,000 ஸ்டார்ட் அப்புகள் உருவாக்கப் படும். 20 லட்சம் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 40 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். வேலைதேடுபவர்கள் வீட்டிற்கு அருகில் வேலைசெய்யச் சர்வதேச வேலைவாய்ப்பு நிறு வனங்களுடன் தொடர்புகொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்படும்.வேலை வழங்குவோரின் சமூகப்பாதுகாப்பு பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளும். வேளாண் துறையில் ஐந்து லட்சமும், வேளாண்மை அல்லாத துறையில் 10 லட்சமும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். உயர்கல்வித் துறை வலுப்படுத்தப்படும். 30 கல்வி நிறுவனங்கள் சிறப்பு மையங்களாக மாற்றப்படும்காவல்துறையினர் பொதுமக்களுடன் அதிக இணக்கமானவர்களாக ஆக்கப்படுவார்கள். ஏழைகளிலும் ஏழ்மையானவர் களின் பட்டியலைத் தயாரித்து, மைக்ரோ திட்டத்தில் ஒரு லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை மிகவும் ஏழைகளுக்கு வழங்கப்படும். இல்லத்தரசிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.700 நிர்ணயிக்கப்படும். ஜப்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும்போது வீடுகளை இழப்போருக்குக் குறைந்தபட்சத் தங்குமிடத்தை ஜப்தி செய்வோர் வழங்குவதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.வெளிநாடுகளில் வசிப்போருக்கான ஒருங்கிணைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டம் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் தொடங்கப்படும். விவசாயிகளின் வருவாயில் 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும். அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ரூ.60,000 கோடி, ரூ.10,000 கோடிக்கான டிரான்ஸ் கிரிட் திட்டம் அமலாக்கப்படும். கிப்பி பாதுகாக்கப்படும்,

கொச்சி - பாலக்காடு, பாலக்காடு - மங்களூர் தொழில்துறை பாதை (கேரிடார்), திருவனந்தபுரம் கேபிடல் சிட்டி காரிடார், சில்வர் லைன் ரெயில் காரிடார் திட்டங்களுடன் கொச்சி உலகளாவிய நகரமாக உருவாக்கப்படும். கோழிக்கோடு, திருவனந்தபுரம் லைட் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும். ஐந்து ஆண்டுகளில் தொழிலில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும். மருந்து உற்பத்தி மையங்களில் (ஹப்) ஒன்றாகக் கேரளம் மாற்றப்படும்.முழுமையாகப் பட்டியல் சாதி குடும்பங்களுக்குத் தங்குமிடம், தொகுப்பு திட்டங்கள் சரியான நேரத்தில்செயல்படுத்தப்படும். கேரளா முழுமையான சுகாதார மாநிலமாக மாற்றப்படும். 30 லட்சம் குடும்பங்களுக்குக் குடிநீர், குழந்தைகள் நட்புத் திட்டங்கள் அமலாக்கப்படும். பட்டினி இல்லாத மாநிலமாகக் கேரளம் மாற்றப்படும். மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டம், தொகுப்புகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப் படும்.ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும், அரசு சேவையில் காலியிடங்கள் சரியான நேரத்தில் நிரப்பப்படும், மின்சார வாகனக் கொள்கை செயல்படுத்தப்படும், சபரி ரயில் பாதை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை, மதச்சார்பின்மையைப் பாதுகாக்கக் கலாச்சாரத் தலையீடுகள் மேற்கொள்ளப்படும். அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் நகரங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப் படும்.

;