states

img

புத்தகங்களையே சொத்தாகக் கொண்ட சிபிஎம் வேட்பாளர்!

கேரள சிபிஎம் வேட்பாளர் டாக்டர்.தாமஸ் ஐசக் புத்தகங்களையே சொத்தாகக் கொண்டுள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான டாக்டர்.தாமஸ் ஐசக், கடந்த 30-ஆம் தேதி அவரது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவில் சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கு சொந்தமாக வீடோ, நிலமோ அல்லது தங்கமோ எதுவும் இல்லை எனவும், தன்னிடம் சொத்தாக ரூ.9.6 லட்சம் மதிப்பிலான 20,000 புத்தகங்கள் மட்டுமே இருப்பதாகவும், அந்த புத்தகங்கள் தனது இளைய சகோதரருக்கு சொந்தமான திருவனந்தபுரம் வீட்டில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.