states

img

47 நாட்கள் ஊரடங்கில் இழப்பு ரூ.79,971 கோடி... கேரள அரசின் வருவாய் வீழ்ச்சி ரூ.33,456 கோடி..... மற்றொரு ஊரடங்கை தாங்க முடியாது.....

திருவனந்தபுரம்:
மற்றொரு ஊரடங்கை கேரளம் தாங்காது. கடந்த ஆண்டு மேற்கொண்ட ஊரடங்கின் பொருளாதார- சமூக தாக்கம் மிகவும் கடுமையானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  கோவிட்டால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க வருவாய் மட்டும் ரூ.33,456 கோடி குறைந்துள்ளதாகவும் அதே நேரத்தில் மாநில செலவினங்களில்சுமார் ரூ.40,000 கோடி அதிகரித்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் மற்றொரு ஊரடங்கின்தாக்கம் தாங்க முடியாததாகிவிடும் என்று அந்த மதிப்பீடு தெரிவித்துள்ளது.

கேரள திட்டமிடல் ஆணையத்தின் விரைவானஆய்வின்படி, கடந்த நிதியாண்டின் முதல் மூன்றுமாதங்களில் ஏற்பட்ட இழப்பு ரூ.80,000 கோடி. குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனம் நடத்தியஆய்வில் மூன்று வகையான பாதிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன. ஊரடங்கின் 47 நாட்களில் நேரடி இழப்பு ரூ .79,971 கோடி. மேலும், சந்தை மந்தநிலையை கணக்கில் எடுத்துக் கொண்டால், இழப்பு ரூ .1.35 லட்சம் கோடியாக உயரும். மூன்றாவதாக, சுற்றுலா, பயணம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் உள்ள நெருக்கடியை மதிப்பீட்டின் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதன்படிஇழப்பு ரூ.1.62 லட்சம் கோடியை கடக்கும்.

பொருளாதாரம் மீட்புப் பாதையில் இருந்தாலும், கேரள பொருளாதாரத்தின் கணிசமான பகுதி ஓரளவே செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு சுற்றுலாத் துறை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாத் துறையும் சரிவில் உள்ளது. திரையரங்குகளின் செயல்பாடு பகுதி அளவே உள்ளது. வீழ்ச்சி கண்ட ஓட்டல் மற்றும் உணவகத் துறையும் எழுந்திருக்கவில்லை. உள்ளூரில் ஏற்படுத்தப்படும் பகுதியளவிலான கட்டுப்பாடுகளும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. சந்தையில் நிச்சயமற்ற தன்மையால் உற்பத்தித் துறையையும் பாதித்துள்ளது. தயாரிப்புகள் விற்கப்படுமா என்பது குறித்த கவலைகள் பரவலாக உள்ளன. இதன் மதிப்பீடு என்னவென்றால், ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குத் திரும்பிச் சென்றால், அது ‘இன்னும் பெரிய இழப்பை’ ஏற்படுத்தும் என்பதாகும்.

கோவிட்டில் வருவாய் குறைந்து வந்தாலும் பொதுச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசின் கூடுதல் செலவு விவரம்:

$ கோவிட் கால நிவாரண உதவிகள் (தொகுப்பு) ரூ.41,614 கோடி

$ நல ஓய்வூதிய ஒதுக்கீடு – ரூ.12,670 கோடி

$ குடும்பஸ்ரீ  மூலம் முதல்வரின் நிவாரண உதவிகள் - ரூ. 1785.19 கோடி

$ ஊரக வேலை உறுதி திட்டத்தில் – ரூ.3571 கோடி

$ ரூ.1000 வீதம் வாழ்வாதார உதவித் தொகை – ரூ.146 கோடி

$ நல வாரிய உறுப்பினர்களுக்கு நிதி உதவி – ரூ.1287 கோடி

$ இலவச உணவு தானிய விநியோகம்- ரூ.100 கோடி

$ இப்போதும் தொடரும் தானியங்கள், மளிகை பொருட்கள் விநியோகம் - ரூ.3610 கோடி

$ பசி இல்லாத கேரளம் திட்டத்தின் கீழ் உணவகங்களுக்கு – ரூ.95 கோடி

$ உணவு பொட்டலங்களுக்கான மாநில அரசின் அரிசி- 700 டன்

$ சுகாதாரத் துறைக்கு– ரூ.4485 கோடி

$கேஎப்சி மூலம் தொழில்முனைவோர்களுக்கு –ரூ.2310

$ கேரள வங்கி சிறப்பு முன்னுரிமை கடன்கள் – ரூ.2892

$ மீனவர்களுக்கு உணவு கிட் – ரூ.10.84 கோடி

$ மீனவர்களுக்கான பஞ்சகால நிவாரணம் – ரூ.51.60 கோடி

ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு – ரூ.8600 கோடி

;