states

img

அதிமுக கொடி கட்டி எல்.முருகன் பிரச்சாரம்!

நீலகிரி நாடாளுமன்ற தொகு தியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல். முருகன் உதகை மாரியம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய்த  பின்பு பிரச்சாரம் மேற்கொண் டார். அவர் பிரச்சார வாகனத்  தில் பாஜக கொடியுடன் கூட் டணி கட்சிகளின் கொடிகள் இருந்தது. அத்தோடு கூட்ட ணியில் இல்லாத அதிமுக  கொடியும் இருந்தது. இத னைக் கண்ட ஊடகவியலா ளர்கள் ‘பிரேக்கிங் நியூஸ்’ கிடைத்த சந்தோசத்தில் எல்.  முருகனோடு சேர்த்து அதி முக கொடியை படம் எடுத்த னர். இதனைக்கண்டு பதற்  றமடைந்த எல். முருகன்,  வேகவேகமாக அதிமுக  கொடியை அகற்ற உத்தர விட்டார். அதற்குள் ஊட கங்கள் அனைத்தையும் படம் பிடித்துவிட்டன.

கடந்த ஒருவாரகாலமாக  எல்.முருகன், அதிமுக கொடி யுடனேயே தேர்தல் பிரச்சா ரம் செய்து வந்துள்ளார். வாக னம் தயார் செய்யப்பட்டதிலி ருந்து தற்போது வரை அதி முக கொடி இருந்ததை  யாரும் பார்க்கவில்லை. அல்  லது கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் அதிமுக வுடன் கள்ளக் கூட்டணி வைத்  திருக்கும் பாஜகவும் அதன்  வேட்பாளர் எல்.முருகனும்  கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.