அனைவருக்கும் பாதுகாப் பான வீடு என்ற இலக்கை நோக்கி கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் கன வுத் திட்டமான “லை ஃபில்” இது வரை 18,072.95 கோடி ரூபாய் செல விடப்பட்டுள்ளது. இதில், மாநில அரசு ரூ.15,991.26 கோடி செலவிட்ட நிலையில், ஒன்றிய அரசிடம் இருந்து வெறும் ரூ.2,081.69 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
செப்டம்பர் 30 அன்று வரை 5,17,199 குடும்பங்களுக்கு “லைப் வீட்டு வசதி” திட்டத்தின் கீழ் வீடு கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4,16,678 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள 1,00,521 வீடு கள் மார்ச் 31, 2025க்குள் கட்டி முடிக்கப்படும். இரண்டாவது பின ராயி அரசு பதவிக்கு வந்த பிறகு, 2,29,415 வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதில் 1,54,547 வீடுகள் கட்டி முடிக் கப்பட்டுள்ளன.
பிஎம்ஏஒய் ரூ.72,000 மற்றும் ரூ.1,50,000
பிஎம்ஏஒய் திட்டத்தில் கிராமப் புற பயனாளிக்கு ரூ.72,000, நகர்ப்புறத்தில் ரூ.1,50,000 மட்டுமே ஒன்றிய அரசின் உதவியாக வழங்கப்படுகிறது. இந்த இரு உத விகளுடன் இணைத்து லைப் திட்டம் கேரளத்தில் செயல்படுத்தப் படுகிறது. பிஎம்ஏஓய் திட்டங்களின் பயனாளிகளை லைப் திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு மாநில அரசு நான்கு லட்சம் ரூபாய் கிடைப்பதை உறுதி செய்கிறது.
லைப் மிஷன் மூலம் நில மற்ற வீடற்றவர்களுக்காக 32 வீட்டுத் தொகுதிகள் மற்றும் தனி யார் நிறுவனங்களுடன் இணைந்து மூன்று வீட்டுத் தொகுதிகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், லைப் மிஷன் மூலம், ஆறு வீட்டுமனை வளாகங்கள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளன. கண்ணூர் மாவட்டம் கடம்பூர், இடுக்கி மாவட்டம் கரிமன்னூர், கோட்டயம் மாவட்டம் விஜயபுரம், கொல்லம் மாவட்டம் புனலூர் ஆகிய இடங்களில் லைப் மிஷன் வீட்டு வளாகங்களைக் கட்டியுள்ளது.
இவை தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மூன்று வீட்டுத் தொகுதிகள் கட்டி முடிக்கப் பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக் கப்பட்டன. மேலும் பவனம் அறக் கட்டளையானது இடுக்கி மாவட்டம் அடிமாலியில் 217-அலகுகள் கொண்ட வீடுகளை லைப் மிஷன் விலைக்கு வாங்கி, நிலமற்ற வீடற்ற வர்களின் மீள்குடியேற்றத்தை உறுதி செய்தது. அதிகபட்சமாக மலப்புறம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 65,612 பயனாளிக ளில் 51,024 பேருக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 65,299 பயனாளிகளில் 51,147 பேருக்கு வீடுகள் கட்டி வழங்கப் பட்டன.
மிக குறைவாக பத்தனம்திட்டை மாவட்டத்தில் தேர்வான 16,121 பயனாளிகளில் 11,805 பேருக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன.