states

img

கேரளா சட்டமன்ற தேர்தல்...  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள்.... 

திருவனந்தபுரம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அதே நாளில் (ஏப்ரல் 6) அண்டை மாநிலமான கேரளத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடைபெறு வரும் நிலையில், எல்டிஎப் என அழைக்கப்படும் இடது ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,"கேரள சட்டசபை தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடும். முதல் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். குறிப்பாக தொடர்ந்து 2 முறை போட்டியிட்டவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு இல்லை" என அவர் அறிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி (மார்க்சிஸ்ட்), ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்), தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக)  என மூன்று விதமான அணிகள் களமிறங்குகின்றன. ஆனால் இடது ஜனநாயக முன்னணி - ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மட்டும் தான் அங்கு நேரடி போட்டி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெயரளவிற்கு களமிறங்குகிறது. 

பல்வேறு கருத்துக்கணிப்பில் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியுடன் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

;